வீடியோ : அமெரிக்கா புளோரன்ஸ் புயலிடம் இருந்து தப்பி நெட்டிசன்களிடம் மாட்டிக்கொண்ட செய்தியாளர்!

‘புளோரன்ஸ்’ என பெயரிடப்பட்ட புயல் அமெரிக்கா கிழக்கு கடலோர பகுதிகளை தாக்கியது. அப்போது அங்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரை அப்புயல் ஒரு கைப்பார்த்தது.

அமெரிக்கா புயலில் சிக்கித் தவித்த செய்தியாளர்:

அமெரிக்காவின் வட கரோலினாவில் ரைட்ஸ்வில்லே கடற்கரை பகுதியில் புயல் கரையை கடந்த போது பலத்த மழை கொட்டியது. மணிக்கு 110 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றும் வீசியது. கடும் மழை பெய்ததால், வடக்கு கரோலினா பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அங்குள்ள 2 ஆறுகளின் கரைகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

இதனால் ரோடுகளில் 10 அடி உயரத்துக்கு மழை வெள்ளம் தேங்கியது. தண்ணீர் குடியிருப்புக்குள் புகுந்தது. இந்த புயலுக்கு இதுவரை சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அப்பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார் தனியார் செய்தி சேனலில் செய்தியாளர்.

அப்போது அங்கு அடித்த சூறைக் காற்றில் நிற்க முடியாமல் அவர் தத்தளித்து வந்தார். இந்த காட்சி அந்த தனியார் செனலில் பதிவானது. அதன் வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பகிர்ந்த சிலர், கவனமாக இருக்கும்படி அறிவுரை வழங்கி வருகின்றனர். ஆனால் சிலர் அவ்வளவு ஒன்றும் பலமாக காற்று வீசவில்லை. இவர் வேண்டுமென்றே இப்படி நடிக்கிறார் என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

‘பின்னால் இரண்டு பேர் எவ்வித சிரமமுமின்றி நடந்துச் செல்லும்போது, இந்த செய்தியாளருக்கு மட்டும் எப்படி இப்படி ஆகும்.” என்று கேள்விகளை எழுப்பியும் மீம்ஸ் போட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close