பாட்னா ரயில் நிலையத்தில் உள்ள டிவி திரைகளில் ஆபாச வீடியோவை ஒளிபரப்பியதற்காக கொல்கத்தாவைச் சேர்ந்த தத்தா கம்யூனிகேஷன் என்ற நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என வழக்குப் பதிவு செய்யப்பட்டு கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
பீகாரின் பாட்னா ரயில் நிலையத்தில் நிறுவப்பட்ட டிவி திரைகளில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் பொதுமக்களை சங்கடப்படுத்தும் வகையில், ஒரு பெரிய முட்டாள்தனமாக 3 நிமிடங்களுக்கு ஆபாச வீடியோவை இயக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தின் மங்கலான வீடியோ கிளிப்புகள் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து பயணிகள் அரசு ரயில்வே காவல்துறை மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்) ஆகியவற்றில் புகார் அளித்துள்ளனர்.
ரயில் நிலையங்களில் உள்ள டிவி திரைகளில் விளம்பரங்களை ஒளிபரப்புவதற்கு பொறுப்பான தத்தா கம்யூனிகேஷன் நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த கொல்கத்தா நிறுவனம் ரயில்வேயால் கருப்புப் ப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிறுவனத்திற்கு அபராதம் விதித்து அதன் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து நெட்டிசன்கள் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியதால், பாட்னா ஜங்ஷன் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது.
“இப்போதுதான் பாட்னா ஜங்ஷன் டிரெண்டிங்கைப் பார்த்தேன், ரயில்வே மறுவடிவமைப்புத் திட்டத்தைப் பற்றிய ஒரு நல்ல செய்தியாக இருக்கலாம் என்று நினைத்தேன். துரதிர்ஷ்டவசமாக, பெரிய டிவி திரையில் ஆபாச படங்கள் ஒளிபரப்பப்பட்டதால் தான் ட்ரெண்டிங் ஆகியுள்ளது” என்று ட்விட்டர் ஒரு பயனர் ட்வீட் செய்துள்ளார்.
“#பாட்னா ஜங்ஷன் ரயில் நிலையம் இப்போது ஒரு புதிய ஈர்ப்பைப் பெற்றுள்ளது: ரயில்வேயின் 50 வண்ணங்கள்: கவலைப்பட வேண்டாம், இது அதிகாரப்பூர்வ மேம்படுத்தல் அல்ல. ஆனால், இது நிச்சயமாக நிறைய குழப்பத்தை ஏற்படுத்துகிறது” என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.
“சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் உள்ள ராஜீவ் சௌக்கிற்குப் பிறகு, #பாட்னா ஜங்ஷனில் விளம்பரம் மற்றும் தகவல்களுக்காக நிறுவப்பட்ட டிவி திரையில் ஆபாசப் படம் ஓட ஆரம்பித்தது. இந்த வெட்கக்கேடான செயலுக்கு காரணமான நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று மற்றொரு நெட்டிசன் பதிவிட்டுள்ளார்.
பாட்னா ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தற்செயலாக ஆபாச வீடியோ ஓடிய பிறகு, பயணிகளின் நிலையை ஒரு ட்விட்டர் பயனர் மீம்ஸ் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”