New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/19/GSVZCYibYYROVgvEjr0J.jpg)
தமிழகத்தில் நாளுக்கு நாள் பெருகி வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் நிர்வாகி வைஷ்ணவி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் பெருகி வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் நிர்வாகி வைஷ்ணவி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் பெருகி வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் நிர்வாகி வைஷ்ணவி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் கடந்த மூன்று மாதங்களாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி உள்ளார்.
குறிப்பாக கோவையில் 17 வயது மாணவி ஏழு பேர் கொண்ட குழுவால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதையும், யோகா ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததையும் அவர் தனது வீடியோவில் குறிப்பிட்டு உள்ளார்.
பெண் குழந்தைகளுக்கு பள்ளி, கல்லூரிகளில் கூட பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு மிகுந்த மன வேதனையுடன் இருப்பதாக வைஷ்ணவி தெரிவித்து உள்ளார். இந்த பிரச்சனைகளுக்கு என்ன தான் தீர்வு என்பது குறித்து அவர் கேள்வி எழுப்பி உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழகத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள்: த.வெ.க பெண் நிர்வாகி வீடியோ வெளியிட்டு வேதனை!#Coimbatore | @Vaishnavi_tvk pic.twitter.com/vBIbJ62Z4s
— Indian Express Tamil (@IeTamil) February 19, 2025
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.