Advertisment

விஜய்க்கு விமானத்தில் வாக்கு சேகரிப்பு: அலப்பறை கிளப்பிய த.வெ.க நிர்வாகி

தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகி விமானத்தில் நடிகர் விஜய் கட்சிக்கு வாக்கு சேகரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
TVK Vj.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பிரபல நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில்  அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி இல்லை, 2026-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை இலக்காக வைத்து கட்சி அறிவித்துள்ளார். தொடர்ந்து முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் விஜய் அறிவித்துள்ளார். 

Advertisment

கட்சியை வளர்ப்பதற்கான அடுத்தக்கட்டப் பணிகளையும் அவர் தீவிரப்படுத்தி உள்ளார். இந்த நிலையில், கடந்த 3 தினங்களுக்கு முன் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை த.வெ.க தலைவர் விஜய் அறிமுகம் செய்தார். இந்நிலையில், சென்னையில் இருந்து மதுரை சென்ற விமானத்தில் கட்சி நிர்வாகி ஒருவர் விஜய் கட்சிக்கு வாக்கு சேகரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகியாக இருப்பவர் லெஃப்ட் பாண்டி. இவர் கடந்த 2 தினங்களுக்கு முன் சென்னையில் இருந்து மதுரை சென்ற விமானத்தில் பயணித்த போது `விஜய் மக்கள் இயக்க கொடி'யை கையில் ஏந்தியவாறு, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்குமாறும், தமிழகத்திற்கு மாற்றம் தேவை, அதை தளபதியால் தான் கொடுக்க முடியும் எனக் கூறியும் வாக்கு சேகரித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment