ஒபாமா எப்போது மீசை, தாடியெல்லாம் வைத்தார்? வைரலாகும் புகைப்படம்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தாடி, மீசை வைத்திருப்பது போன்ற போலி புகைப்படம் இணையத்தில் பரவலாக வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தாடி வைத்திருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரக் ஒபாமா சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ட்ரெண்டாகும் தலைவர்களுள் ஒருவர் ஆவார். இனவாத எதிர்ப்பு, அன்பு குறித்த அவருடைய ட்விட்டர் பதிவுகள் மிகவும் பிரபலம். அதேபோன்று, மனைவி, தன் மகள்களுடன் அவர் எளிய மனிதராக அவர் நேரம் செலவிடும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும்.

தற்போது மீண்டும் பாரக் ஒபாமாவின் புகைப்படம் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வெள்ளை, கருப்பு முடியுடன் அவர் தாடி, மீசை வளர்த்திருப்பது போன்ற புகைப்படம் தான் அது. ஆனால், அது பாரக் ஒபாமாவின் உண்மையான புகைப்படம் அல்ல என்பது கூடுதல் தகவல். இருப்பினும், “ஒபாமா தாடி வளர்த்திருக்கிறாரா”, என ஆச்சரியத்துடன் அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

‘தி ஷேட் ரூம்’ (The Shade Room) என்ற பொழுதுபோக்கு இணையத்தளம் இந்த புகைப்படத்தை முதன்முதலில் வெளியிட்டதாக தெரிகிறது. அப்போதிலிருந்து இந்த புகைப்படம் பரப்பப்பட்டு வருகிறது.

ஒபாமா தாடி, மீசை வைத்திருப்பதுபோன்ற இந்த புகைப்படத்தை பலரும் விரும்பியுள்ளனர். அதேசமயம், பலருக்கும் இந்த புகைப்படம் மகிழ்ச்சியை தரவில்லை.

×Close
×Close