Advertisment

இவர் கேரளாவின் சிங்க பெண்! நடுரோட்டில் அரசு பேருந்து டிரைவரை அலற வைத்த வீடியோ

ஒரு தவறை தைரியமாக தட்டிகேட்ட மகிழ்ச்சியுடன் அங்கிருந்து புறப்படுகிறார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
twitter today viral video

twitter today viral video

twitter today viral video : கேரளாவில் தவறான பாதையில் வந்த அரசு பேருந்தை துணிச்சலாக ஒரே ஆளாக நின்று தடுத்த சிங்க பெண்ணின் வீடியோ ட்ரெண்ட் அடித்துள்ளது.

Advertisment

இந்தியாவில் நாளுக்கு நாள் போக்குவரத்து விபத்துக்கள் அதிகரிக்க காரணம் வாகன ஓட்டிகளின் அலட்சியம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. முன்பெல்லாம் கார்,பைக்கில் சென்றால் தான் விபத்து நேரிடும். இப்போது எல்லாம் பிளாட்பாரத்தில் நடந்து சென்றாலே ஆபத்து தான். பின்னால் வரும் வண்டி எப்போது நம்மை ஏத்திவிட்டு செல்லும் என்பது நமக்கே தெரியாது. ஆக மொத்தத்தில் நம் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது.

சரி வாகன ஓட்டிகள் தான் இப்படி பொறுப்பு இல்லாமல் நடந்துக் கொள்கிறார்கள் என்று பார்த்தால் அரசு போக்குவரத்து டிரைவர்கள் அதற்கு மேல் இருக்கிறார்கள். தங்களது பொறுப்பை சரியாக உணராத இதுப்போன்ற டிரைவர்களால் தான் பேருந்தில் செல்லவும் பலரும் தயங்குகின்றனர். இவர்களை கேள்வி கேட்கும் முழு உரிமையும் நம்மிடம் இருக்கிறது. அதை தான் தைரியமாக செய்தார் கேரளாவை சேர்ந்த இந்த பெண்.

வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தவறான வழியில் வந்த அரசு பேருந்தை இந்த பெண் துணிச்சலாக எதிர்ந்து நின்று டிரைவரை திணறடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி பரவி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

கேரள மாநிலத்தின் போக்குவரத்து கழகமான கேஎஸ்ஆர்டிசி-க்கு சொந்தமான அரசு பேருந்து ஒன்று தவறான பாதையில் வந்தது. எந்தவித யோசனையும் இன்று பஸ்சின் டிரைவர் சர்வ சாதாரணமாக பேருந்தை ஓட்டி வருகிறார். அந்த சாலையில் நின்றுக் கொண்டிருக்கும் ஆட்டோ டிரைவர்கள், மற்ற வாகன் ஓட்டிகள் கத்துகிறார்கள் தவிர எதையும் செய்யவில்லை.

அப்போது தான் அந்த சிங்க பெண்ணின் எண்ட்ரி. ரெட் கலர் ஸ்கூட்டியில் எதிரே வரும் அவர், நடுரோட்டில் வண்டியை நிறுத்தி விட்டு, பஸ் டிரைவரை கண்டு முறைக்கிறார். பேருந்துக்கு பின்னாடி மற்ற வாகங்கள் வரிசை கட்டி நின்ற போதும் அவர் நகராமல் டிரைவரை முறைத்தப்படி வண்டியை எடுக்காமல் நிற்கிறார்.

இதுசரிப்பட்டு வராது என்பதை உணர்ந்த அந்த டிரைவர் கடைசியில் தவறை உணர்ந்து பேருந்து சரியான பாதையில் செலுத்தி நகர்கிறார். ஒரு தவறை தைரியமாக தட்டிகேட்ட மகிழ்ச்சியுடன் அங்க்ருந்து புறப்படுகிறார் அந்த பெண்.

Viral Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment