ஆளுநரின் செயல் ட்விட்டரில் ட்ரெண்டானது என்றால் நம்ப முடிகிறதா?

அவரிடம் கேள்வி கேட்ட பெண் பத்திரிக்கையாளர் கன்னத்தில் பேத்தி மாறி என்று கூறி ஆளுநர் தட்டினார்.

பெண் பத்திரிக்கையாளரை பேத்தி என்று கூறி  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்  அவரை கன்னத்தில் தட்டிய விவகாரம் ட்விட்டரிலும் வெடித்தது.

இரண்டு  தினங்களுக்கு முன்பு தமிழ்நாட்டையே உலுக்கிய  ஒரு   தொலைபேசி உரையாடல்  வெளியானது. நிர்மலா தேவி என்ற பேராசிரியர் தனது கல்லூரி மாணவிகளை 5 பேரை தவறான செயலுக்கு சம்மதம் தெரிவிக்குமாறு அழைத்தார்.  அதற்கு மாணவிகளை கட்டாயப்படுத்தி தனது பேச்சினால் அவர்களை  மூளை சலவை( Brain wash)  செய்தார்.

இந்த ஆடியோ வெளியான விவகாரத்தை அடுத்து,  நிர்மலா தேவியை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், அந்த உரையாடலில் நிர்மலா தனக்கு ஆளுநர் அளவுக்கு செல்வாக்கு உள்ளதாகவும், எதையும் சாதிக்க முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனால், யார் அந்த ஆளுநர் என்ற கேள்வி  எழுந்தது. மேலும் நிர்மலா  தேவிக்கு பெரிய அளவில் உதவிய அந்த புள்ளிகள் யார் என்ற விசாரணையும் நடைப்பெற்று வருகிறது.இந்த நிலையில் தான் நேற்று செய்தியாளர்களை ஆளுநர் பன்வாரிவால் சந்தித்து விளக்கம் அளித்தார்.

இந்தச் சந்திப்பில் அவரிடம் கேள்வி கேட்ட பெண் பத்திரிக்கையாளர்  கன்னத்தில் பேத்தி மாறி என்று கூறி ஆளுநர் தட்டினார். இதை சற்றும் எதிர்ப்பார்க்காத  பெண் செய்தியாளர் இந்நிகழ்வு குறித்து கடுமையான விமர்சனங்களை   சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தார்.

இதற்பு ஆதரவு தெரிவித்து ட்விட்டர் வலைப்பக்கத்தில், என்ற ஹாஸ்டேக்   வைரலாகியது. மூத்த பத்திரிக்கையாளர்கள்,  ஊடக துறைச் சார்ந்தவர்கள் என பலர்  ஆளுநரின் செயலை கடுமையாக விமர்சித்திருந்தனர். அத்துடன், இளைஞர்கள் சிலரும் ஆளுநரை வழக்கம் போல் மீம்ஸ்களால் கலாய்த்து தள்ளி இருந்தனர்.

 

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close