twitter trending today : பெங்களூரில் சாலையில் மழை நீர் தேங்க காரணமான பள்ளத்தை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சுத்தம் செய்த போக்குவரத்து காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
பெங்களூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பெங்களூரில் ரயில் நிலையம் அருகில் உள்ள பிரதான சாலையில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகின.
அதுமட்டுமில்லை சாலையில் ஏற்கனவே தோண்டி வைக்கப்பட்ட பள்ளத்தில் மழை நீர் தேங்க தொடங்கியது. இதனால் பொதுமக்களுக்கு விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இதனைப் பார்த்த அந்த பகுதி டிராபிக் போலீஸ் மண்வெட்டியுடன் களத்தில் இறங்கினார்.
மழை பெய்துக் கொண்டிருக்கும் போதே சாலையில் இறங்கி அந்த பள்ளத்தை அவரே சரிசெய்தார். இதையடுத்து சாலையில் தண்ணீர் குறைந்து போக்குவரத்து சீரானது.
இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து ஆச்சரியப்பட்டனர். மேலும் களத்தில் இறங்கிய காவலருக்கு தங்களது பாராட்டுக்களையும் தெரிவித்தனர். இந்த வீடியோ ட்விட்டரில் வெளியாகி வைரலாகி வருகிறது. பல்வேறு தரப்பில் இருந்து அந்த காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.