யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ராகுல் காந்திக்கு தொண்டர் கொடுத்த முத்தம்! ஷாக்கிங் வீடியோ

இதை ராகுலும் எதிர்பார்க்கவில்லை ஆனாலும் சிரித்துக் கொண்டே அந்த

By: Updated: August 29, 2019, 11:41:20 AM

twitter trends video : ராகுல் காந்தி மீது தனக்கு இருக்கும் அன்பை முத்தமிட்டு நிரூப்பித்துள்ளார் கேரளா தொண்டர் ஒருவர். நேற்று முதல் இவர் செய்த செயல் தான் இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

யாருப்பா நீ? ஷாக்கான ராகுல்!

கடவுளின் தேசமான கேரளாவை சில வாரங்களுக்கு முன்பு வெள்ளம் பெருமளவில் சேதப்படுத்தியது. குறிப்பாக வயநாடு போன்ற இடங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தனர். இந்நிலையில், அந்த தொகுதியின் எம்பியான ராகுல் காந்தி ஏற்கனவே நேரில் சென்று பொதுமக்கள் மற்றும் வெள்ளம் பாதித்த இடங்களை பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் ராகுல் காந்தி 4 நாட்கள் சுற்றுப்பயணமாக வயநாடு சென்றுள்ளார். கடந்த இரண்டு நாட்களாக சுங்கம், மக்கியாடு, ஓமச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து நிவாரணப் பணிகள் பற்றி கேட்டறிந்தார். நேற்று வயநாடு சென்றார். அப்போது ராகுல் ஓரிடத்தில் காரை நிறுத்தி தொண்டர்களை சந்தித்து கைகுலுக்கினார். அந்த நேரத்தில் செய்தியாளர்களும் கேள்விகளை எழுப்ப தயாராக இருந்தனர்.

அப்போது லேசாக தூறலும் விழுந்து கொண்டிருந்தது. இந்த நேரத்தில் நீல நிற சட்டை அணிந்திருந்த காங்கிரஸ் தொண்டர் ஒருவர், ராகுல் காந்திக்கு கைகுலுக்க முயன்றார். ராகுலும் அவரிடம் கைக்குலுக்கி அன்பை பரிமாறினார். அந்த நொடியே, அந்த நபர் ராகுலை திடீரென்று அணைத்து கன்னத்தில் இச் என்று முத்தமிட்டார். (இதை ராகுலும் எதிர்பார்க்கவில்லை) ஆனாலும் சிரித்துக் கொண்டே அந்த நிகழ்வை ஈஸியாக கையாண்டார் ராகுல் காந்தி.

இதனால் பதட்டமடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அப்புறபடுத்தினார்கள். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ராகுல் மீது அந்த தொண்டருக்கு இருக்கும் அன்புக்கு எடுத்துக்காட்டு தான் இந்த நிகழ்வு என்று வயநாடு காங்கிரஸ் தலைவர்கள் கருத்து கூறியுள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Twitter trends video facebook viral video today

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X