இது என்னவென்று தெரிகிறதா? : குழம்பிய நெட்டிசன்கள் - நீங்க வேணும்னா கண்டுபிடிங்க
Twitter viral photo : இந்த போட்டோவிற்கு, நெட்டிசன்கள் பல்வேறு விதமான பதில்களை அளித்திருந்தனர். ஆனால் அனைத்து பதில்களும் தவறானவை என்று சுசாந்தா நந்தா குறிப்பிட்டிருந்தார்.
இந்திய வனத் துறை அதிகாரி, சுசாந்தா நந்தா, சமீபத்தில் டுவிட்டரில் வெளியிட்டிருந்த போட்டோ, நெட்டிசன்களிடையே பெரும்குழப்பத்தை ஏற்படுத்தியிருந்ததோடு மட்டுமல்லாது, புதுவித தகவலையும் அறிய வழிவகை செய்துள்ளது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
டுவிட்டரில் வைரலாகி வரும் ஒரு போட்டோ, நெட்டிசன்களை பெருங்குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. வைரலான புகைப்படத்தில் ஒரு உயிரினத்தின் கால் போன்ற அமைப்பு உள்ளது. அதில் ஐந்து விரல்கள் இருப்பதும் தெரிகின்றன. ஆனால், இதைப் போன்று மனிதர்களுக்குத்தான் ஐந்து நீண்ட விரல்கள் கொண்ட கால்கள் இருக்கும். ஆனால், அது மனிதனின் கால் இல்லை என்பது தெரிகிறது. அதேபோல மிருகத்தின் காலும் இல்லை என்பது தெளிவாகிறது.
சுசாந்தா நந்தா, இந்தப் படத்தை சமீபத்தில், தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். படத்துடன் அவர், “இந்தப் படத்தில் இருக்கும் மிருகத்தை உங்களால் அடையாளம் காண முடிகிறதா?” என கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த போட்டோவிற்கு, நெட்டிசன்கள் பல்வேறு விதமான பதில்களை அளித்திருந்தனர். ஆனால் அனைத்து பதில்களும் தவறானவை என்று சுசாந்தா நந்தா குறிப்பிட்டிருந்தார்.
பின் அவரே, அதற்கான பதிலை தெரிவித்திருந்தார், அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, படத்தில் தெரிவது ஒரு வித பூஞ்சை என்று தெரிவித்தார். அதன் பெயர் Dead Man's Fingers or Xylaria polymorpha என்றும் கூறினார். இறந்த மனிதனின் கால் போன்று இருப்பதனால் இந்த பூஞ்சைக்கு இப்படியொரு பெயர். இந்த பூஞ்சைகள் இரண்டு முதல் ஐந்து கொத்தாக உளுத்துப் போன கட்டைகள் மற்றும் காட்டுப் பகுதிகளில் அதிகம் முளைக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil