New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/10/Capture-3.jpg)
twitter viral today video
உற்று நோக்கினால் அந்த குரங்கு திவேதிக்கு பேன் பார்ப்பது நன்கு தெரிகிறது.
twitter viral today video
twitter viral today video : பிஸியாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போலீஸ் அதிகாரியின் முதுகில் அமர்ந்துக் கொண்டு குரங்கு ஒன்று பேன் பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிலிபிட் காவல் நிலையத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ கடந்த 2 தினங்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது. போலீஸ் அதிகாரிக்கு பேன் பார்க்கும் குரங்கின் காட்சிகள் தான் இந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கிறது.
காவல் அதிகாரி ஷ்ரீகாந்த் திவேதி காவல் நிலையத்தில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்துக் கொண்டு ஆவணத்தை பிஸியாக தேடிக் கொண்டிருக்கிறார். அவரின் முதுகில் கூலாக ஒரு குரங்கு அமர்ந்துக் கொண்டு திவேதியின் தலையில் ஏதோ செய்துக் கொண்டிருக்கிறது. உற்று நோக்கினால் அந்த குரங்கு திவேதிக்கு பேன் பார்ப்பது நன்கு தெரிகிறது.
ஆனால், அவரோ எந்த ரியாக்ஷனும் தராமல் பிஸியாக அந்த ஃபைல்களை புரட்டிக் கொண்டிருக்கிறார்.இது தற்செயலாக நடந்த செயல் போல் தெரியவில்லை. குரங்கு தன் மீது அமர்ந்திருப்பத்தை நினைத்து அந்த போலீஸ் அதிகாரி பயமுமோ, சத்தம் கூட போடவில்லை. குரங்கை விரட்டவும்வில்லை. அதே போல் அந்த குரங்கும் நன்கு பழகியது போல் அவரின் தலையில் பேன்களை தேடிக் கொண்டிருக்கிறது.
पीलीभीत के इन इन्स्पेक्टर साहब का अनुभव ये बताता है कि यदि आप काम करने में व्यवधान नहीं चाहते हैं तो रीठा, शिकाकाई या अच्छा शैम्पू इस्तेमाल करें ! #Shampoo #Hair #Police #monkeylove #Monkey pic.twitter.com/7sPQtuS2A6
— RAHUL SRIVASTAV (@upcoprahul) October 8, 2019
இந்த வீடியோ ட்விட்டரில் வெளியிடப்பட்டு, தற்போது நாடு முழுவதும் படு வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.