twitter viral today videos : இந்த வீடியோவை பார்ப்பவர்கள் அனைவருக்கும் முதலில் தோன்றும் கேள்வி யாருய்யா அந்த டிரைவர் என்பது தான். யானைக்காக பயணிகளின் ரயிலை நிறுத்தி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார் மேற்கு வங்க ரயில் டிரைவர் .
சில வாரங்களுக்கு முன்பு நம் கண்களில் ரத்த கண்ணீர் வர வைத்த யானையின் விபத்து நடந்த அதே மேற்கு வங்கத்தில் தான் இந்த சம்பவமும் நடந்துள்ளது. ஆனால் இந்த வீடியோ பார்ப்பதற்கு ஆறுதல் அளித்ததோடு பலருக்கும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்று அந்த யானை இறந்த செய்தி ஒட்டு மொத்த இந்தியாவிலும் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு மேற்கு வங்கம் அலிபுர்தார் பகுதியில் எதிரே ரயில் வருவது கூட தெரியாமல் யானை ஒன்று தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்கிறது அதன் உயிரை காப்பற்ற டிரைவர் பயணிகள் ரயிலை பிரேக் போட்டு நிறுத்தியுள்ளார்.
இதுத் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுக் குறித்து அலிபுர்தார் கோட்ட ரயில்வே அதிகாரி ட்விட்டரில் வீடியோவுடன் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் அந்த டிரைவருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.