twitter viral twitter today :விஜய்யின் சிங்க பென்ணே சாங் தான் இப்போது யூடியூப் ட்ரெண்டிங் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் நிஜமான சிங்கப் பெண் பற்றி தான் நீங்கள் இங்கே பார்க்க போகிறீர்கள். சிங்கத்தின் முன்னே போய் நின்று டான்ஸ் ஆடிவிட்டு உயிருடன் தப்பித்து வந்த சிங்க பெண் தான் அவர் ”என்ன ஒரு தைரியம்” அதான யோசிக்கிறீங்க.
நியுயோர்க்கின் பிராங்ஸ் உயிரியல் பூங்கா மிகவும் பிரபலமான வனவிலங்கு பூங்கா ஆகும். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாவாசிகள் வந்து செல்வார்கள். ஆனால் மிகவும் கட்டுப்பாட்டுகள். யானை, சிங்கம், புலி போன்ற வனவிலங்குகள் சாலையில் வந்து செல்லும் அளவிற்கு சுதந்திரமாக இருப்பதால் இங்கு அனுமதிக்கப்படும் சுற்றுலாவாசிகள் கடுமையான் கண்காணிப்புகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இந்த எல்லா பாதுகாப்பையும் கடந்த பெண் ஒருவர், வேலியை எகிறி குதித்து சிங்கத்தின் முன்னாடி போய் நின்று டான்ஸ் ஆடிவிட்டு வந்துள்ளார். சிங்கம் அவரை நோக்கி முன்னேறி வருகின்ற போதிலும் அச்சமற்றவராக அந்த பெண் டான்ஸ் ஆடுகிறார். இதை வெளியில் இருக்கும் மற்றொரு நபர் செல்போனில் படம் பிடிக்கிறார்.
Crazy woman climbs into a lion's enclosure at the Bronx Zoo. Even the lion is shocked. ???? pic.twitter.com/plWfkL6pGZ
— Tim Xeriland (@Xeriland) October 2, 2019
அந்த பெண் எப்படி உள்ளே நுழைந்தார்? எவ்வளவு நேரம் அங்கிருந்தார்? எப்படி வெளியேறினார் ?என்பது போன்ற விபரங்கள் வெளியாகவில்லை.அவர் டான்ஸ் ஆடிய வீடியோ மட்டும் இண்டர்நெட்டில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த பெண் நடனமாடியது ஆக்ரோஷமான ஆப்பிரிக்கா சிங்கம் முன்பு. கடுமையான கோபத்தில் இருந்த அந்த சிங்கம் பாய்ந்து இருந்தால் மிகப் பெரிய விபரீதமே நடந்திருக்கும்.
ஆனால் அந்த சிங்கம் சில மணிநேரத்திற்கு முன்பு தான் வயிறார சாப்பிட்டு இருந்தது. அதனால் தான் அந்த சிங்கம் அவரை ஒன்றும் செய்யவில்லை என்று பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்போது வரை அந்த பெண் எதற்காக சிங்கத்தின் முன்னாடி சென்று டான்ஸ் ஆடினார் என்ற காரணம் மட்டும் வெளியாகவில்லை. அதை அவரே சொன்னால் மட்டுமே வெளியில் தெரியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.