New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/08/sachin-86.jpg)
twitter viral video today
5 கிலோவுக்கு மேல் எடை கொண்ட பள்ளி பையை அணிந்துகொண்டு பல்டி
twitter viral video today
twitter viral video today : நேற்று முதல் ஒட்டு மொத்த இணையமும் ஒரு பள்ளி மாணவியை கண்டு பொறாமை பட்டு வருகிறது. பசங்களே செய்ய முடியாத வித்தையை அசால்ட்டாக செய்து காட்டி இருக்கிறார் அந்த மாணவி. நட்ட நடு ரோடு. கண்ணில் துளி அளவு பயமில்லை. ஸ்கூல் யூனிஃபார்மில் சும்மா அந்தர் பல்டி அடிக்கிறார் அந்த பெண்.
இந்த வீடியோவை பார்த்தவர்கள் அந்த பெண்ணை பாராட்டாமல் இல்லை. நாட்டின் மூலை முடுக்கெல்லாம் இந்த வீடியோ தீயாக பரவி வருகிறது. ஒலிம்பிக் ஜிம்நாஸ்டிக் வீராங்கனை நாடியா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். மேலும் மத்திய விளையாடு துறை அமைச்சர் கிரிண் ரிஜிஜு, அந்த சிறுமிக்கு உதவுவதாக குறிப்பிட்டும் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள மாணவியின் பெயர், அவர் படிக்கும் பள்ளியின் விவரம் எதுவும் தெரியவில்லை. ஸ்கூல் விட்டு வீட்டுக்கு செல்லும் வழியில் தனது தம்பியுடன் அந்த பெண் சென்றுக் கொண்டிருக்கிறார்.அப்போது அந்த சிறுவன் வேகமாக ஓடி வந்து பல்டி ஒன்றை அடிக்கிறார். அதற்கு அடுத்த கணமே, இந்த பெண், சற்று யோசிக்காமல் அசால்ட்டாக பல்டி அடித்து அசர வைக்கிறார்.
This is awesome pic.twitter.com/G3MxCo0TzG
— Nadia Comaneci (@nadiacomaneci10) August 29, 2019
இதில் கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால், 5 கிலோவுக்கு மேல் எடை கொண்ட பள்ளி பையை அணிந்துகொண்டு பல்டி அடித்ததுதான் மிகப்பெரும் ஆச்சரியம் என அந்த மாணவியை இணைய வாசிகள் பாராட்டி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.