twitter viral video: கடந்த வாரம் ஒலிம்பிக் ஜிம்நாஸ்டிக் வீராங்கனை நாடியா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த பள்ளி மாணவர்களின் பல்டி வீடியோ இணையத்தையே புரட்டி போட்டது ஞாபகம் இருக்கிறதா? அந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து யார் அந்த மாணவர்கள் என்ற தேடல் தான் அதிகம் இருந்தது.
ஆனால், அவர்கள் குறித்த எந்த ஒரு விவரமும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், அந்த 2 சாகச மாணவர்களின் குடும்ப நிலை உட்பட அனைத்து விவரங்களும் தற்போது வெளியாகியுள்ளது.
திறமை என்பது இடம், பணம் சார்ந்து வருவது இல்லை என்பதற்கு மற்றொரு உதாரணம் தான் 11 வயதாகும் ஜாஷிகா மற்றும் அலி. கொல்கத்தாவின் பிஎனார் காலணியை சேர்ந்த இவர்கள் அருகில் இருக்கும் அரசு பள்ளியில் படித்து வருகிறார்கள். இருவருக்கும் சிறுவயதில் இருந்தே ஜிம்னாஸ்டிக் மீது அளாதியான ஆசை இருந்து வந்துள்ளது. நடனம் கற்றுக் கொள்ளவும் ஆசைப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் குடும்ப வறுமை காரணமாக அதை மறந்து படிப்பில் கவனம் செலுத்தி வந்துள்ளனர். இருவரும் அவ்வப்போது ரோட்டில் செல்லும் போது இதுப் போன்ற சாகசங்களில் ஈடுப்படுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர்.
அப்படி தான் எதர்ச்சையாக அன்று பள்ளி விட்டு வரும் போது இருவரும் பல்டி அடித்து காட்ட அதை வீடியோவாக பதிவு செய்த இணையத்தில் கசிய விட்டார் அந்த பெயர் தெரியாத நபர். கடைசியில் இவர்கள் இருவரும் இப்போது ஒட்டு மொத்த உலகத்திற்கும் பரீட்சையமான முகமாக மாறி விட்டர்கள்.
This is awesome pic.twitter.com/G3MxCo0TzG
— Nadia Comaneci (@nadiacomaneci10) August 29, 2019
இவர்கள் விவரம் மட்டும் தெரிய வந்தால் மத்திய விளையாடு துறை அமைச்சர் கிரிண் ரிஜிஜு இருவரும் முறையான பயிற்சி பெற முழு ஆதரவை அவர்களுக்கு அளிப்பதாக உறுதியளித்திருந்தார். அவரின் உறுதிமொழி கூடிய விரைவில் செயல்படுத்தப்படும் என ஜாசிகா மற்றும் அலி குடும்பத்தினர் முழு நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஜாசிகாவின் தந்தை டிரைவர். இவருக்கு 3 மகள்கள். ஜாசிகா தான் மூத்தவர். அரசாங்கம் தந்த குடிசை வாரிய வீட்டில் வசித்து வருகிறார்கள். தனது மகளிடம் இருக்கும் திறமையால் தங்களின் குடும்பமே இன்று பெருமையடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அலியின் தந்தை கூலி தொழிலாளி, அலிக்கு 2 தங்கைளும் உள்ளனர். இவர்களின் திறமையைக் கண்ட கொல்கத்தாவை சேர்ந்த நடன கலைஞர் ஒருவர் இலவசமாக இருவருக்கும் நடனம் கற்று தரவும் முன் வந்துள்ளார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:Twitter viral video