Advertisment

தங்கைக்கு அடுத்த அம்மாவான சிறுவன்.. அவனே சமைத்து ஊட்டிவிடும் பாசமலர் வீடியோ!

ஒரு நிமிடம் நம்மை கண்கலங்க வைத்துவிடுகிறது இந்த பாசமலர்களின் வீடியோ.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
twitter viral videos

twitter viral videos

twitter viral videos : அண்ணன் தங்கை.. இந்த உறவுக்கு ஈடு இணை ஏதேனும் உண்டா. அம்மாவைப் போல் அக்கா என்பார்கள். அப்பாவைப் போல் அண்ணன் என்பார்கள். இந்த அண்ணன் தங்கை செண்டிமேட்டை வைத்து தமிழ் சினிமாவில் வராத படங்களே இல்லை.

Advertisment

அண்ணன் தங்கை:

அப்படி வந்த படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் தான். அதற்கு காரணமே நம்ம பசங்க அண்ணன் -தங்கை உறவை அப்படி நேசிப்பது தான். ஒரு வீட்டில் தகப்பான் இல்லையென்றாலோ, அல்லது மறைந்து விட்டாலோ தனக்கு கீழ் இருக்கும் தங்கையை தகப்பன் சானத்தில் இருந்து வளர்ப்பது அண்ணன்கள் தான்.

பல குடும்பத்தில் அண்ணன் – தங்கை பாசத்தை கலாய்க்கும் வகையில் “ஆமா பெரிய பாசமலர் அண்ணன் தங்கச்சி” என்பார்கள். எத்தனை வருடங்கள் ஆகட்டும் அப்படியொரு அண்ணன் தங்கை பாச காவியத்தை மீண்டும் ஒருமுறை எவராலும் எடுத்திட முடியாது.

இந்த அண்ணன் தங்கை உறவு சமூகவலைத்தளங்களிலும் அடிக்கடி பேசப்படும், வீடியோக்களாகவும் பகிரப்படும். அப்படித்தான் ஏதோ ஒரு மூலையில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ கடந்த 2 நாட்களாக சமூகவலைத்தளங்களில் படு வைரலாக பரவி வருகிறது.

பசியால் அழும் தனது தங்கையை பார்த்து ”அழாதமா அண்ணன் செஞ்சு தரனு” சொல்லி களத்தில் இறங்குகிறார் இந்த குட்டி சிறுவன். தங்கைக்காக அவன் செய்யும் ஸ்பெஷல் டிஷ் இந்தோனேசியன் பிரைடு ரைஸ்.

அடுப்பில் கடாயை வைத்து தேவையான அனைத்து பொருட்களையும் சேர்த்து, அதனுடன் தனது பாசத்தையும் சேர்த்து தன் தங்கைக்கும் தனக்குமான உணவைத் தயார் செய்கிறான். அதன் பின் ரைஸ் தயாரானதும், ஒரு பவுலில் கொட்டி தன் தங்கைக்கு தன் கையாலே ஊட்டி விடுகிறான்.

இந்த வீடியோவை பார்ப்பவர்கள் அனைவருக்கும் தங்களது அண்ணன் நினைவு வராமல் இல்லை. ஒரு நிமிடம் நம்மை கண்கலங்க வைத்துவிடுகிறது இந்த பாசமலர்களின் வீடியோ.

Viral Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment