New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/08/sachin-13.jpg)
twitter viral videos today
தனது மகளை போலவே பெண் வேடமிட்டு தப்பிக்க முயன்ற சம்பவம்
twitter viral videos today
twitter viral videos today : பிரேசில் நாட்டில் போதை பொருள் விற்றதற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட திருடன், ஜெயிலிருந்து தப்பிக்க தனது மகளை போலவே பெண் வேடமிட்டு தப்பிக்க முயன்ற சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கிளாவினா டா சில்வா என்ற நபர், சட்ட விரோதமாகப் போதைப் பொருள் கடத்தல் செய்ததற்காக அந்நாட்டு போலீசாரால் அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்ட நாளிலிருந்து பிற கைதிகளுடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு வந்துள்ளார். அதுமட்டுமில்லை இதற்கு முன்பு 2 முறை தப்பிக்கவும் முயன்றார்.
இந்நிலையில், தனது செல்வாக்கை பயன்படுத்தி வெளியில் இருக்கும் தனது கூட்டாளிகள் மூலம் பெண் வேடமிட முகமூடி, டோப்பா, பெண் ஆடைகள்,அனைத்தையும் ஜெயிலில் பெற்றுக் கொண்டுள்ளார். இந்த அலங்கார பொருட்களை பயன்படுத்தி அச்சு அசல் தனது சொந்த மகளை போலவே வேடமிட்டி சிறையில் இருந்து தப்பிக்க சில்வா பிளான் செய்திருக்கிறார்.
ஆனால், அவரின் இந்த திட்டத்தை போலீசார் எளிமையாக மோப்பம் பிடித்தனர். அவர், சரியாக வேடமிட்டு வெளியே வந்த நேரத்தில் கையும் களவுமாக சில்வாவை பிடித்தனர். அவரை பார்க்கும் போது போலீசார் சற்று நேரத்தில் வியந்து விட்டனராம்.
அப்படியே அச்சு அசல் பெண் போலவே அவர் மாறியிருந்தார். இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவரின் மேக்கப்பை போலீசார் கொஞ்சம் கொஞ்சமாக கலைத்த வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.