இணையமே கொண்டாடும் மனித முகம் கொண்ட நாய்க்குட்டி!

இந்த நாய்க்குட்டி உண்மை இல்லை என்று, ஃபோட்டோஷாப் செய்யப்பட்டுள்ளது என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்ய ஆரம்பித்தனர்

மனிதர்களை போலவே முகத்தோற்றம் கொண்ட நாய்க்குட்டிகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

செல்லப்பிராணிகளில் பலருக்கு மிகவும் பிடித்தாக இருப்பது நாய்க்குட்டிகள் தான். முன்பெல்லாம் வீட்டின் காவலுக்காக வளர்க்கப்பட்ட நாய்கள் தற்போது அழகுக்காகவே அதிகம் வளர்க்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் மிச்செல் என்ற பெண் சமீபத்தில் முக முழுவதும் முடியினால் மூடி இருக்கும் அரிய வகை நாய்க்குட்டி ஒன்றை வாங்கியுள்ளார். பின்பு அந்த நாய்க்குட்டியின் முகத்தில் இருக்கும் முடியை மட்டும் அழகுக்காக வெட்டியுள்ளார். முடி வெட்டப்பட்ட அந்த நாயின் முகம் பார்ப்பதற்கு அச்சு அசலாக மனிதர்களை போலவே இருந்துள்ளது. அதுமட்டுமின்றி வாய் மற்றும் கண்களும் அப்படியே பொருந்தியுள்ளது.

இந்த நாய்க்குட்டியின் புகைப்படத்தை அந்த பெண், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பதிவிட்டு சிறிது நேரத்திற்கு இது வைரலானது. அதே சமயம், இந்த நாய்க்குட்டி உண்மை இல்லை என்று, ஃபோட்டோஷாப் செய்யப்பட்டுள்ளது என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்ய ஆரம்பித்தனர்

ஆனால்.இந்த  கருத்தை நாய்க்குட்டியின் உரிமையாளர் மிச்செல் முற்றிலும் மறுத்துள்ளார். ”எனக்கு போட்டோஷாப் குறித்து ஒன்றும் தெரியாது. நான் எனது நாயின் புகைப்படத்தை கடந்த டிசம்பர் மாதம் சமூகவளைதளத்தில் பதிவேற்றினேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த நாய்க்குட்டியின் புகைப்படத்தை இணையமே கொண்டாட ஆரம்பித்துள்ளது. மேலும், தங்களின் முகத்தோற்றத்துடன் நாய்க்குட்டியின் புகைப்படத்தையும் வைத்து நெட்டிசன்கள் ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close