New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/03/2-38.jpg)
உயர் அதிகாரிகள் மற்றும் மற்ற காவல் நிலையத்தில் இருந்த பிற அதிகாரிகள் சல்யூட் செய்து வரவேற்றனர்.
தன்னுடைய 7 வயதில் மரணத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் சிறுவனின் ஒரு நாள் போலீஸ் ஆசையை நிறைவேற்றிய மும்பை நகர போலீசாருக்கு பாரட்டுக்கள் குவிந்து வருகின்றன.
மும்பையில், 7 வயதாகும், அர்பிட் மாண்டல் என்ற சிறுவன் சில வருடங்களாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறான். அர்பிட்க்கு வளர்ந்து பெரியவனாதும் போலீஸ் ஆக வேண்டும் என்பது தான் கனவாம். ஆனால், அவனை மிகவும் பிடித்துப் போய் அவனுடனே இருக்கும் புற்று நோய் அவனை அதுவரை விட்டு வைக்குமா என்று தெரியவில்லை.
இந்நிலையில், சிறுவன் அர்பிட்டின் ஆசை மும்பை நகர காவல் துறையினருக்கு தெரிய வந்துள்ளது. உடனே சிறுவனின் ஆசையை நிறைவேற்ற நினைத்த முல்லண்ட் பகுதி காவல் துறையினர் சிறுவன் அர்பிட்டை இன்று (23.3.18)ஒரு நாள் காவல் துறை அதிகாரியாக நியமித்தனர்.
தனக்கு இப்படி ஒரு சந்தர்பம் கிடைக்கும் என்பதை சற்றும் எதிர்பார்க்காத சிறுவன் அர்மிட், இன்ஸ்பெக்டர் உடையில் மிடுக்குடன் ஒரு நாள் அதிகாரியாக காவல் நிலையத்திற்கு சென்றான். அவனை உயர் அதிகாரிகள் மற்றும் பிற காவல் அதிகாரிகள் சல்யூட் செய்து வரவேற்றனர்.
,
Mulund Police Station was completely won over by the undaunted spirit of 7 year old Arpit Mandal, fighting cancer! If we could, we would fulfill all his wishes beyond just being a Police inspector for a day #ProtectingSmiles @MakeAWishIndia pic.twitter.com/jPOJosXFDU
— Mumbai Police (@MumbaiPolice) March 23, 2018
பின்பு, ஒரு நாள் காவல் அதிகாரியான அட்மிட்டை போலீஸ் உடையில் ஃபோட்டோ எடுத்து, மும்பை நகர காவல் துறையினரின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் பக்கத்தில் வெளியிட்டனர். சிறுவனின் கனவை நிறைவேற்றி மும்பை காவல் துறையினருக்கும் சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.
,
sir i respect mombai police , DILSE
— HEMANTA KR. BARMAN (@HEMANTAKRBARMA2) March 23, 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.