பிரபலமான வாசகங்களைப் வித்தியாசமாக மாற்றிப் பயன்படுத்தி கவனத்தை ஈர்க்கும் சமூக ஊடகமான டுவிட்டர். இப்போது அனைவருக்கும் தெரிந்த ஒரு சாலை பாதுகாப்பு வாசகத்தை வித்தியாசமாக மாற்றிப் பயன்படுத்தி டுவிட்டர் பயனர்களை ஈர்த்துள்ளது.
சமூக ஊடகங்களில் முன்னணியில் இருக்கும் டுவிட்டர், பொதுமக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் வாசகங்களைப் பயன்படுத்தி அதை வித்தியாசமாக மாற்றி பதிவிட்டு சமூக ஊடக பயனர்களை ஈர்ப்பது என்பது அவ்வப்போது நடந்துவருகிறது.
அந்த வகையில், அனைவரும் சாலைகளில் பார்த்து அறிந்த சாலைப்போக்குவரத்து பாதுகாப்பு வாசகம் ஒன்று என்றால் அது ‘Don’t drink and Drive’ என்பது அதாவது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர் என்பதாகும்.
சிலர் மது அருந்திவிட்டு போதையில் நிதானம் இழந்து அதிவேகத்தில் வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. பல உயிரிழப்புகள் நேரிடுகின்றன. இதனால்தான், போக்குவரத்து போலீசார், சாலைகளில் ஆங்காங்கே ‘Don’t drink and Drive’, குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர் என்ற வாசகத்தை எழுதி வைத்துள்ளது. ஆனாலும், சிலர் இந்த எச்சரிக்கையை மதிக்காமல் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் போலீசார் வாகன சோதனையில் சிக்கி அபராதம் செலுத்துகின்றனர். தொடர்ந்து இத்தகையை செயலில் ஈடுபடும்போது அவர்களுடைய ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்கின்றனர்.
Don't drink and Tweet
— Twitter (@Twitter) January 11, 2020
டுவிட்டரில் அவ்வப்போது சில அரசியல் கட்சிகள், நடிகரின் ரசிகர்கள், சில குழுக்கள் திடீரென ஒன்றை ட்ரெண்ட் செய்வார்கள். இதனால், சில நேரங்களில் எதற்காக இந்த வாசகம் ட்ரெண்ட் செய்கிறார்கள் என்று கூட தெரியாமல் போய்விடும். இதனை குறிப்பிடும் விதமாகவோ என்னவோ, பிரபலமான வாசகங்களைப் வித்தியாசமாக மாற்றி கவனத்தை ஈர்க்கும் டுவிட்டர் Don't drink and Drive - மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர் என்பதை ‘Don't drink and Tweet’ - மது அருந்திவிட்டு டுவிட் செய்யாதீர் என்று டுவிட் செய்துள்ளது.
டுவிட்டரின் இந்த டுவிட்டை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் டுவிட் செய்துள்ளனர்.
You're right. Sorry... :(
— Cassey Jones (@hakiki_cassey) January 11, 2020
இதற்கு சிலர் நீங்கள் சொல்வது சரிதான் என்று மன்னிக்கவும் என்று கூறியுள்ளனர்.
Don't tweet and drive
— dani (@danielle_twts) January 11, 2020
அதே போல, மற்றொரு டுவிட்டர் பயனர், ‘Don't tweet and Drink’- டுவிட் செய்துவிட்டு வாகனம் ஓட்டாதீர் என்று குறிப்பிட்டுள்ளார்.
Also a golden rule
— Twitter (@Twitter) January 11, 2020
இதற்கு பதிலளித்துள்ள டுவிட்டர் இதுகூட ஒரு பொன்னான விதிதான் என்று பதில் டுவிட் செய்துள்ளது.
டுவிட்டரின் இந்த ‘Don't drink and Tweet’ - மது அருந்திவிட்டு டுவிட் செய்யாதீர் என்ற டுவிட் ட்ரெண்ட் ஆகி கவனத்தை ஈர்த்த்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.