Viral Video: பூமியில் நிலத்தில் வாழும் மிகப் பெரிய விலங்கு என்றால் அது யானைதான். நிலத்தில் மிக பலம் வாய்ந்த விலங்கு என்றாலும் அது யானைதான். அப்படி பலம் வாய்ந்த 2 யானைகள் தண்ணீரில் சண்டையிட்டால் எப்படி இருக்கும். கற்பனை செய்து பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது இல்லையா. ஆனால், நிஜமாகவே 2 பெரிய யானைகள் நீரில் மல்யுத்தம் செய்து சண்டையிட்டு மோதிக்கொள்ளும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தண்ணீரில் இரண்டு பெரிய யானைகள் சண்டையிட்டு மோதிக்கொள்கிற வீடியொ சமூக ஊகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. யானைகளின் மல்யுத்தம் பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்.
தண்ணீரில் யானைகள் சண்டையிடும் வீடிவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுதா ராமென் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் ஒரு நீர் நிலையில், ஒரு யானை வேகமாக வருகிறது. மறுபக்கம் இன்னொரு யானை இருக்கிறது. சில நொடிகளிலேயே இரண்டு யானைகளும் தும்பிக்கைகளை உயர்த்தி தும்பிக்கையால் பினைத்துக்கொண்டு சண்டையிட்டு பலப்பரீட்சை நடத்துகின்றன. பிறகு, சண்டையை விடுத்து விலகிச் செல்கின்றன.
இந்த வீடியோ பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கிறது. பலம் வாய்ந்த இரண்டு யானைகள் மோதிக் கொள்வது என்பது இரண்டு மலைகள் மோதிக்கொள்வது போல இருக்கிறது. யானைகள் சண்டையிடும் வீடியோ சமூக ஊடகங்களில் பார்வையாளர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“