scorecardresearch

காட்டை அதிர வைக்கும் இடி முழக்கம்… யானைகளின் மல்யுத்த சண்டை: வீடியோ

காட்டில் இரண்டு யானைகள் சண்டை போடுகிற விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. யானைகளின் சண்டையின் இடி முழக்கத்தில் காடே அதிர்கிறது. இந்த வீடியோவைப் பார்க்கும்போது, மிகவும் த்ரில்லிங்காக இருக்கிறது.

virl video, Two Elephants fighting video, Titans fights, காடு அதிரும் இடிமுழக்கம், யானைகளின் மல்யுத்த சண்டை, வைரல் வீடியோ, Titan fighting jungle thunders, elephant viral video
யானைகளின் மல்யுத்த சண்டை: வீடியோ

viral video: காடு பல அதிசயங்களையும் சுவாரசியங்களையும் தன்னகத்தே வைத்திருக்கிறது. அதனால் தான், மனிதர்கள் சமவெளி பகுதிகளில், மாநகரம், நகரங்களில் வாழத் தொடங்கிவிட்ட பிறகும் கூட காடுகளுக்கு சென்று இயற்கையை ரசிக்க வேண்டும் என்று நினைக்கிறான்.

வனவிலங்குகள் மீது மனிதர்களுக்கு எப்போதும் ஒரு ஆர்வம் இருந்து வருகிறது. சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, யானை, காண்டாமிருகம் போன்ற வன விலங்குகளை மக்கள் பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள்.

அந்த வகையில், காட்டில் இரண்டு யானைகள் சண்டை போடுகிற விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. யானைகளின் சண்டையின் இடி முழக்கத்தில் காடே அதிர்கிறது. இந்த வீடியோவைப் பார்க்கும்போது, மிகவும் த்ரில்லிங்காக இருக்கிறது.

இந்த வீடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். “யானைகள் மோதும் போது, காடு இடி முழக்கமிடுகிறது… நம்முடைய காட்டில் பார்க்கக்கூடிய மிக அற்புதமான தருணம் இது. நிச்சயமாக இந்த வீடியோ பார்ப்பவரை சிலிர்க்க வைக்கிறது. ஆனால், யானைகள் தந்தங்களைப் பூட்டி சண்டையிடும்போது ஏற்படும் சிலிர்ப்புடன் எதுவும் ஈடாகாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் காட்டில் ஒரு நீரோடையில் மணல் நிறைந்த பகுதியில் இரண்டு யானைகள் நேருக்கு நேர் முட்டி மோதி சண்டையிடுகின்றன. யானைகளின் சண்டையில் எழும் இடி முழக்கத்தில் காடே அதிர்க்கிறது. வீடியோ பார்வையாளர்களுக்கு ஒரு த்ரில்லிங்கான விருந்தாக அமைந்துள்ளது. யானைகளின் சண்டையை நீங்களும் பாருங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Two elephants fights the jungle thunders video goes viral