New Update
/indian-express-tamil/media/media_files/Nz0ISwby5upMLv4JWsM2.jpg)
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் போதை பழக்கத்துக்கு எதிராக சிறுமிகள் நாட்டுப்புற பாடல் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளவர்களுக்கு அறிவுரை கூறும் விதமாக கோவையில் சிறுமிகள் பாடிய நாட்டுப்புற பாடல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோவை பேரூர் பகுதியை சேர்ந்த சரவணகுமார், மகாலட்சுமி தம்பதியினரின் மகள்கள் ஜனிக்கா ஶ்ரீ(13), சுதிக்க்ஷா ஶ்ரீ (8),இவர்கள் சிறு வயது முதலே நாட்டுப்புற கலைகள் மீது ஆர்வம் கொண்டதை அடுத்து இவர்கள் நடன ஆசிரியர் சாய் புவனிடம் கலைகளை கற்று வருகின்றனர்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் போதை பழக்கத்துக்கு எதிராக நாட்டுப்புற பாடலை பாடி பதிலடி கொடுத்த பள்ளி சிறுமிகள் - வைரலாகும் சிறுமிகளின் விழிப்புணர்வு பாடல்..! pic.twitter.com/BxbH4K4vRG
— Ellappan (@EllappanYa43462) October 2, 2024
இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே உள்ள கஞ்சா மற்றும் போதை பழக்கத்தை விட்டு விட்டு நல் வழியில் போக வேண்டும் என்பதை இந்த ஶ்ரீ சகோதரிகள் இருவரும் இணைந்து நாட்டுப்புற விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடியுள்ளனர்.
அதில் 'தன் பிள்ளைகள் போதை பழக்கத்தால் அடிமையாகி உள்ளதை பார்த்து பெற்ற வயிறு நொந்து சாகுது,வேணாம் தம்பி போதை பழக்கம், அதை விட்டா நல்ல பாதை கிடைக்கும் என பல்வேறு வரிகளை கொண்டு பாடல்களை பாடியுள்ளனர்.ஶ்ரீ சகோதரிகள் பாடிய இந்த பாடல் தற்போது இணையத்தில் வேகமாக வைராலகி வருகிறது.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.