New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/05/b816.jpg)
two head snake viral video tamil latest viral video
two head snake viral video tamil latest viral video
Tamil Viral Video: இரட்டை தலைகளைக் கொண்ட அரிய வகை பாம்பு ஒன்று சமீபத்தில் ஒடிசாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரட்டை தலை கொண்ட பாம்புகளை காண்பது என்பது அரிது. அவ்வளவு எளிதில் இவற்றை காண முடியாது. இந்நிலையில், இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தனது ட்விட்டரில் இரட்டை தலை பாம்பு ஒன்றின் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
ஒரு குடிக்கு இவ்வளவு கடியா - மது வெறியில் பாம்பை கடித்து குதறிய வாலிபர்
"ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தின் தெஹ்ன்கிகோட் வனப்பகுதி வரம்பில் உள்ள ஒரு வீட்டிலிருந்து முழுமையாக உருவான இரண்டு தலைகளைக் கொண்ட ஒரு அரிய ஓநாய் பாம்பு மீட்கப்பட்டது" என்று குறிப்பிட்டு அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
7, 2020A rare wolf snake with two fully formed heads was rescued from a house in the Dehnkikote Forrest range of Keonjhar district in Odisha.
Later released in Forests. pic.twitter.com/7fE0eMciEB
— Susanta Nanda IFS (@susantananda3)
A rare wolf snake with two fully formed heads was rescued from a house in the Dehnkikote Forrest range of Keonjhar district in Odisha.
— Susanta Nanda IFS (@susantananda3) May 7, 2020
Later released in Forests. pic.twitter.com/7fE0eMciEB
இது தொடர்பாக தி மிரர் தெரிவித்துள்ள தகவலின் படி, விஷமில்லாத இந்த பாம்பிற்கு முழுமையாக இரண்டு தலைகள் உள்ளன. அதாவது, நான்கு கண்கள் மற்றும் இரண்டு நாக்குகள் உள்ளன. ஆனால், ஒரே உடல் மட்டுமே கொண்டுள்ளது. நம்ப முடியாத அளவு இரண்டு தலைகளும் ஒன்றுக்கொன்று சுயமாக செயல்படுகின்றன. அவைகள் தனக்கான உணவுக்காக தனித்தனியாக போராடுவதைக் காணப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அந்த பாம்பு காட்டுக்குள் விடப்பட்டது என்று அதிகாரி சுசாந்தா நந்தா தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.