சிங்கத்துக்கும் சிங்கத்துக்கும் சண்டை… அதை ஊரே வேடிக்கை பார்க்குது பாருங்க: வீடியோ

சஃபாரி சுற்றுலா சென்ற பயணிகள், இரண்டு சிங்கங்கள் லைவ்வாக சண்டை போடுவதை வேடிக்கை பார்க்கும் வீடியொ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

சஃபாரி சுற்றுலா சென்ற பயணிகள், இரண்டு சிங்கங்கள் லைவ்வாக சண்டை போடுவதை வேடிக்கை பார்க்கும் வீடியொ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Two lions fighting, Two lions fighting video goes viral, lions fighting video, gir national park, சிங்கத்துக்கும் சிங்கத்துக்கும் சண்டை, சிங்கம் சண்டை போடுவதை ஊரே வேடிக்கை பார்க்குது பாருங்க, வைரல் வீடியோ, Two lions fighting video

இரண்டு சிங்கங்கள் சண்டையிடும் காட்சி

viral video: காடு பல அதிசயங்களையும் சுவாரசியங்களையும் தன்னகத்தே வைத்திருக்கிறது. அதனால் தான், மனிதர்கள் சமவெளி பகுதிகளில், மாநகரம், நகரங்களில் வாழத் தொடங்கிவிட்ட பிறகும் கூட காடுகளுக்கு சென்று இயற்கையை ரசிக்க வேண்டும் என்று நினைக்கிறான்.

Advertisment

தேசிய வனவிலங்குகள் பூங்காக்களுக்கு சஃபாரி சுற்றுலா செல்வது ஆண்டுதோறும் அதிகரித்தே வருகிறது. சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, யானை, காண்டாமிருகம் போன்ற வனவிலங்குகளை நேரில் காண பலரும் ஆர்வத்துடன் சஃபாரி சுற்றுலா செல்கிறார்கள். அப்படி, சஃபாரி செல்லும்போது சில அரிதான காட்சிகளையும் பார்க்க முடியும்.

அந்த வகையில், கிர் தேசிய பூங்காவுக்கு சஃபாரி சுற்றுலா சென்ற பயணிகள், இரண்டு சிங்கங்கள் லைவ்வாக சண்டை போடுவதை வேடிக்கை பார்க்கும் வீடியொ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்க்கும்போது, முனி படத்தில் வருகிற வசனத்தை கொஞ்சம் மாற்றி, சிங்கத்துக்கும் சிங்கத்துக்கும் சண்டை… அதை ஊரே வேடிக்கை பார்க்குது பாருங்க என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

Advertisment
Advertisements

இந்த வீடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுரேந்தர் மெஹ்ரா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை ஜுபின் அஷரா @zubinashara பதிவு செய்துள்ளார்.

கிர் தேசியப் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் சஃபாரி சென்று வனவிலங்குகளை வேடிக்கை பார்க்கிறார்கள். அப்போது, தூரத்தில் இரண்டு சிங்கங்கள் கடுமையாக சண்டை போடுகின்றன. அவை என்ன நினைத்ததோ தெரியவில்லை திடீரென இரண்டும் அமைதியாகி செல்கிறார்கள். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ குறித்து ஒரு ட்விட்டர் பயனர், “பார்வையாளர்களுக்காக ஒரு சும்மா சண்டை” என்று பதிவிட்டுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: