குஜராத் மாநிலம், வதோதராவில் உள்ள விஸ்வாமித்ரி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட முதலையை ஐ.எம்.ஏ தன்னார்வலர்கள் 2 பேர் ஸ்கூட்டரில் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குஜராத்தில் கன மழை பெய்து வரும் நிலையில், வதோதரா நகரின் பல்வேறு பகுதிகளில் முதலைகள் காணப்படுவதால் பொதுமக்கள் அச்சத்திற்குள்ளாகி இருக்கிறார்கள். வதோதராவில் உள்ள விஸ்வாமித்ரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், முதலைகள் ஆற்றில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தன. சமீபத்தில், வதோதராவில் உள்ள விஸ்வாமித்ரி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட முதலையை 2 தன்னார்வலர்கள் ஸ்கூட்டரில் வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
मगरमच्छ भी याद रखेगा की टू व्हीलर पर सैर करने का आनंद क्या होता है। दरअसल विश्वामित्र नदी से निकले मगरमच्छ को दो युवक वन विभाग के दफ्तर पहुंचा रहे हैं। #VadodaraFloods pic.twitter.com/chu8lWrLcA
— Dixit Soni (@DixitGujarat) August 31, 2024
இந்த வீடியோவை எக்ஸ் சமூக வலைதளத்தில் திக்ஷீத் சோனி (@DixitGujarat) என்ற பயனர் வெளியிட்டார். இந்தியன் எக்ஸ்பிரஸ் மூலம் அவர்கள் இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) தன்னார்வலர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் போது ஏற்படும் சுவாரஸ்யம் முதலைக்கு கூட நினைவில் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டு இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இந்த வீடியோவில் இரண்டு இளைஞர்கள் ஒரு முதலையை விஸ்வாமித்ரி ஆற்றில் இருந்து வனத்துறை அலுவலகத்திற்குக் கொண்டு செல்வதைப் பார்க்க முடிகிறது.
விஸ்வாமித்ரி ஆற்றில் சுமார் 440 முதலைகள் வசிக்கின்றன, அவற்றில் பல அஜ்வா அணையில் இருந்து தண்ணீர் வெளியேறுவதால் ஏற்படும் வெள்ளத்தின் போது குடியிருப்பு பகுதிகளுக்குச் செல்கின்றன. வீட்டின் கூரைகள், சாலைகள் மற்றும் கல்லூரிகளில் பல முதலைகள் காணப்படுகின்றன. அதனால், முதலைகளின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வைரல் வீடியோவைப் பார்த்த ஒரு எக்ஸ் பயனர், “அவர்கள் அதை மிகவும் சாதாரணமாக கையாளுகிறார்கள், இது அவர்களின் செல்லப் பிராணி போல் தெரிகிறது. நான் அவர்களைப் போல தைரியமாக இருக்க விரும்புகிறேன்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
ஒரு குறும்புக்கார எக்ஸ் பயனர், “இது முற்றிலும் தவறு, ஒரு முதலை ஹெல்மெட் இல்லாமல் எப்படி சவாரி செய்ய முடியும்?” என்று நகைச்சுவையாக கேட்டுள்ளார்.
மற்றொரு பயனர், “அவர்கள் தைரியமானவர்கள், அவர்கள் இதை நன்றாகக் கையாண்டார்கள்... அவர்களுக்கு வெகுமதி கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்று கமெண்ட் செய்துள்ளார்.
இதனிடையே, விஸ்வாமித்ரி ஆற்றின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால், மீட்கப்பட்ட முதலைகள் மற்றும் பிற ஊர்வன விலங்குகள் விரைவில் விடுவிக்கப்பட உள்ளன.
அதே போல, குஜராத்தின் வதோதராவில் மிகக் கடுமையான மழை பொழிவுக்கு மத்தியில், கடந்த ஆகஸ்ட் 27 மற்றும் 29 தேதிகளில் மட்டும் மொத்தம் 24 முதலைகள் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.