வனவிலங்குகள் குறித்த வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் எப்போதும் தனி மவுசு உண்டு. அந்த வகையில்,ஆஸ்திரேலிய வனவிலங்கு சரணாலயத்தில் இரண்டு விஷ பாம்புகள் (venomous snakes) சண்டையிடும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஆஸ்திரேலிய வனவிலங்கு கன்சர்வேன்சியின் (Australian Wildlife Conservancy) பேஸ்புக் (Facebook) பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், ஸ்கொட்டியா வனவிலங்கு சரணாலயத்தில் (Scotia Wildlife Sanctuary) முல்கா பாம்புகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சண்டையிட்டுக் கொண்டிருப்பதை கன்சர்வேன்சி குறிப்பிட்டுள்ளது.
இந்த இரு பாம்புகளும் தங்களது பலத்தை நிரூபிக்கும் முயற்சியில் சண்டையிடும் காட்சி பார்வையாளர்களை அதிர்ச்சியில் உறைய வைதுள்ளது. இந்த வீடியோவை பதிவுசெய்த AWC சூழலியல் நிபுணர் தாலி மொய்ல் கூறுகையில், "பாம்புகளின் இனச்சேர்க்கை காலத்தில், ஆண் பாம்புகள் சண்டையிடத் தொடங்குகின்றது, தங்களது ஆதிக்கத்தை நிரூபிக்கும் முயற்சியாகவும், பெண் பாம்புகளுக்கு துணையாக இருப்பதற்கான உரிமைக்காகவும், இந்த பாம்புகள் ஒன்றுடன் ஒன்று கட்டிப்புரண்டு தங்களது பலத்தை நிரூபிக்கின்றன. சண்டையின்போது, பாம்புகள் வழக்கமாக ஒன்றோடு ஒன்று கட்டிப்புரண்டு, தனது எதிரி பாம்பினை தங்கள் தலையால் கீழே தள்ள முயற்சிக்கின்றன.
இந்த வீடியோவை தற்போது வரை 2 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ள நிலையில், 324 லைக்குகளையும் பெற்றுள்ளது. இந்த வீடியோ படமாக்கப்பட்ட ஸ்கோடியா வனவிலங்கு சரணாலயம் (Scotia Wildlife Sanctuary) முர்ரே-டார்லிங் பேசினில் (Murray-Darling Basin) அமைந்துள்ளது. மேலும் 65,000 ஹெக்டேர் பரப்பளவுள்ள இந்த சரணாலயத்தில் ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய அச்சுறுத்தலான வனவிலங்குகளுக்கு தங்குமிடமாக உள்ளது.
இந்த வீடியோ குறித்து பார்வையாளர் ஒருவர் கூறுகையில்,
முல்கா பாம்புகள் வலிமைமிக்கது!" “பாம்புகள் சண்டையிடுவதையோ, அவைகள் இனச்சேர்க்கையோ நான் கவனிக்கவில்லை, அவைகள் நிமிர்ந்து நிற்பதைப் பார்ப்பது மிகவும் விசித்திரமாக உள்ளது" என தெரிவித்துள்ளார். மேலும“இது ஒரு இனச்சேர்க்கை நிலை என்று நான் நினைத்தேன், மலைப்பாம்புகள் மட்டுமே இதைச் செய்துள்ளன என்று முன்னர் நினைத்திருந்தேன், என்றார்.
இதேபோல் சமீபத்தில் இரண்டு ஆண் புலிகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவில், சுற்றுலாப் பயணிகள் பார்க்கும்போது இரண்டு புலிகள் கர்ஜித்து ஒன்றையொன்று சண்டையிட்டு கொள்வதுபோல் இருந்தது. சுற்றுலாப் பயணிகளில் ஒருவர் இந்த வீடியோவை யூடியூபில் (YouTube) பகிர்ந்துள்ளார், அதன் பிறகு இது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தின் பெஞ்ச் தேசிய பூங்காவில் உள்ள கர்மசாரி கேட்டில் (Karmazari gate at Pench National Park in Madhya Pradesh) அருகே நடந்ததாக கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.