New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/28/xm4Wq5oucpq8cOWKmbl8.jpg)
ஆக்ரோஷமாக சண்டை போட்ட புலிகள் கடைசியில் என்ன ஆனது என்று பாருங்கள்.
ஆக்ரோஷமாக சண்டை போட்ட புலிகள் கடைசியில் என்ன ஆனது என்று பாருங்கள்.
சமூக ஊடகங்களின் காலத்தில் தினமும் ஆயிரக் கணக்கான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை வன விலங்குகள் வீடியோதான். இதற்கு காரணம், மனிதர்களிடம் வனத்தைப் பற்றியும் வனவிலங்குகளைப் பற்றிய ஆர்வமும்தான்.
காடுகளைப் பற்றியும் வனவிலங்குகளைப் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள், காடுகளில் பதிவு செய்யப்படும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், ஐ.எஃப்.எஸ் அதிகாரி ரவீந்திர மணி திரிபாதி, கன்ஹா புலிகள் காப்பகத்தில், இரண்டு புலிகள் புழுதி பறக்க சண்டைபோட்ட வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆக்ரோஷமாக சண்டை போட்ட புலிகள் கடைசியில் என்ன ஆனது என்று பாருங்கள்.
A battle between two titans..
— Ravindra Mani Tripathi (@RavindraIfs) January 27, 2025
कान्हा टाइगर रिजर्व में दो बाघों के आपसी संघर्ष को हमारे टूरिस्ट ने अपने कैमरे में कैद किया...#tiger #nature #wild pic.twitter.com/F4v3UKPhm6
இந்த வீடியோ, மத்தியப் பிரதேசத்தில், கன்ஹா புலிகள் காப்பகத்தில் சஃபாரி சென்ற சுற்றுலாப் பயணியில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு புலிகள் மிகவும் ஆக்ரோசமாக சண்டை போடுகின்றன. மாறிமாறி 2 கால்களில் எழுந்து நின்று தாக்குகின்றன. புலிகளின் சண்டை மிகவும் ஆக்ரோஷமாக இருக்கிறது. சண்டை முடிந்ததும், 2 புலிகளும் சமாதானமாகி அமைதியாக நடந்து சென்றன.
இந்த வீடியோ குறித்து, ஐ.எஃப்.எஸ் அதிகாரி ரவீந்திர மணி திரிபாதி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடுகையில், “இரண்டு டைட்டன்களுக்கு இடையிலான போர்.. கன்ஹா புலிகள் காப்பகத்தில் இரண்டு புலிகளுக்கு இடையிலான சண்டையை சுற்றுலாப் பயணி தனது கேமராவில் படம் பிடித்தார்...” என்று குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு புலிகளூம் புழுதிப் பறக்க பயங்கரமாக சண்டைபோடும் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.