வன விலங்குகள் எப்போதும் வினொதமானவை. அவற்றை மனிதர்களால் கணிக்கவே முடியாது. அந்த வகையில், காட்டில் திடீரென இரண்டு புலிகள் பயங்கர சண்டையிட்டு மோதிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
காடுகள் பல அற்புதங்களையும் அதிசயங்களையும் தன்னகத்தை மறைத்து வைத்திருக்கிறது. மனிதர்கள் காடுகளை பாதுகாப்பது நாங்கள்தான் என்று சொல்லிக்கொண்டாலும் உண்மையில் காடுகளை காட்டு விலங்குகள்தான் பாதுகாக்கின்றன. யானைகள், புலிகள், சிறுத்தைகள்தான் காடுகளை பாதுகாப்பவைகளாக இருக்கின்றன. ஒரு காட்டில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கையைப் பொருத்தே அந்த காட்டின் பரப்பளவு உறுதிப்படுத்தப்படுகிறது.
சமூக ஊடகங்களின் காலத்தில் ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கான வனவிலங்குகள் வீடியோ நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது. அதற்கு மனிதர்களுக்கு வனவிலங்குகள் மீது இருக்கிற ஆர்வம்தான் காரணம். காட்டுக்கு சென்று விலங்குகளை நேரடியாக பார்ப்பதற்கான வாய்ப்பு குறைவு என்பதால் வனவிலங்குகள் வீடியோ நெட்டிசன்கள் மத்தில் பெரும் வரவேற்பு பெற்று வைரலாகின்றன.
அந்த வகையில், காட்டில் இரண்டு புலிகள் திடீரென பயங்கர சண்டையிட்டு மோதுகின்றன. சில நொடிகளிலேயே எதுவும் நடக்காதது போல, 2 புலிகளும் சகஜமாக அமைதியாக செல்கிற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை, ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுரேந்திர மெஹ்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சும்மா ஒரு விளையாட்டு சண்டை என்று குறிப்பிட்டுள்ளார்.
வனத்துறையினர் காட்டில் ரோந்து செல்லும்போது, காட்டில் ஒரு இடத்தில், இரண்டு புலிகள் கடுமையான பயங்கர சண்டையிட்டு மோதுகின்றன. புழுதி பறக்கிறது. பார்ப்பவர்களை மிரளச் செய்கிறது. ஆனால், சில வினாடிகளில் இரண்டு புலிகளும் சண்டையை விடுத்து, இரண்டும் சகஜமாக அமைதியாக நண்பர்களைப் போல நடந்து செல்கின்றன. இரண்டு புலிகள் சும்மா ஒரு பயங்கர சண்டை போட்டு மோதினாலும், சில வினாடிகளில் சகஜமாக நடந்து செல்வதைப் பார்க்கும்போது இதை விளையாட்டு சண்டை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“