திங்கள்கிழமை இரவு ஒரு குடும்பத்தினர் தங்கள் ‘பெட் ரூம்’ உள்ளே புகுந்த மிகவும் விஷமுள்ள இரண்டு பாம்புகளைப் பார்த்து திகிலடைந்தனர். ‘பெட் ரூம்’ உள்ளே புகுந்த இரண்டு பாம்புகள் இணைந்து விளையாடியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஆங்கிலத்தில் படிக்க: Family discovers 2 venomous snakes in bedroom; IFS officer shares rescue video
இந்த சம்பவத்தின் வீடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்துள்ளார், அவர் பாம்புகள் ‘பெட் ரூம்’ உள்ளே புகுந்ததைப் பார்த்த பிறகு தனது குழுவிற்கு ஒரு கிராமத்தில் இருந்து அவசர அழைப்பு வந்ததாக விளக்கினார்.
“எங்கள் பீட் ஊழியர் ஒருவருக்கு நேற்று இரவு ஒரு கிராமத்திலிருந்து அவசர அழைப்பு வந்தது. யாரோ ஒருவரின் ‘பெட் ரூம்’ உள்ளே புகுந்த மிகவும் விஷமுள்ல 'வால்ஸ் கிரெய்ட்' பாம்புகள் இணைந்து விளையாடியதை கற்பனை செய்து பாருங்கள்” என்று கஸ்வான் எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளார். “இந்த பாம்புகள் விரைவில் மீட்கப்பட்டு பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டன” என்று கஸ்வான் தனது பதிவில் கூறியுள்ளார்.
பாம்புகள் ‘பெட் ரூம்’ உள்ளே புகுந்து கட்டிலுக்கு அடியில் இரண்டு பாம்புகளும் பிண்ணி இணைந்து சுழன்றதால், கிராம மக்கள் வெளியே கூடி, திகைத்து, வாய் பிளக்க வேடிக்கை பார்த்து இந்த காட்சியை தங்கள் தொலைபேசியில் பதிவு செய்தனர்.
‘பெட் ரூம்’ உள்ளே புகுந்த பாம்புகள் இணைந்து விளையாடிய வைரல் வீடியோவைப் பாருங்கள்:
So one of our beat staff got SOS call in middle of night yesterday from a village. Imagine these highly venomous ‘Walls Krait’ doing duel in somebody bedroom. They were rescued & released safely later. pic.twitter.com/nnzOHjATte
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) October 22, 2024
செவ்வாய்க்கிழமை பகிரப்பட்ட இந்த 98,000 பார்வைகளைப் பெற்றுள்ளது. பாம்புகளை மீட்டு கிராம மக்களை பாதுகாப்பதில் குழுவினர் மேற்கொண்ட முயற்சிக்கு பார்வையாளர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
“பாம்புகளைப் பாதுகாப்பாக மீட்ட குழுவிற்கு பாராட்டுக்கள்” என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்தார். “நிச்சயமாக, இந்தியாவில் நடக்கும் பெரும்பாலான பாம்பு கடி மரணங்களுக்கு அவர்கள்தான் காரணம், பயமுறுத்தும் ஆனால் அழகானவர்கள், முன்பு போல் அவர்களைக் கொல்வதற்குப் பதிலாக மீட்பதற்கு மக்கள் பாம்பு பிடிப்பவர்களை அழைப்பதில் மகிழ்ச்சி” என்று மற்றொரு நபர் கூறினார். மூன்றாவது பயனர், “பாலிவுட் நாக் மற்றும் நாகினி விஷயங்கள் போல் தெரிகிறது” என்று கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.
வால்ஸ் கிரைட் வகை பாம்புகள், குறிப்பாக இந்தியா, வங்கதேசம் மற்றும் மியான்மர் நாடுகளில் காணப்படுகின்றன. இது பங்காரஸ் இனத்தைச் சேர்ந்த க்ரைட் இனமாகும். வால்ஸ் க்ரைட் பாம்புகள் இரவு நேரத்தில் உலாவுபவை. பொதுவாக வனப்பகுதிகள், விவசாய நிலங்கள் மற்றும் மனிதர்கள் குடியிருப்புகளுக்கு அருகில் காணப்படுகின்றன. இந்த பாம்பு வகைக்கு பிரிட்டிஷ் ஹெர்பெட்டாலஜிஸ்ட் பிராங்க் வால்-ன் பெயர் சூட்டப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.