10 வயது சிறுமியை குஷி படுத்திய திமிங்கலம் : வீடியோ வைரல்

அந்த துல்லியமான தருணத்தில், அவர்கள்  இந்த வீடியோவை  பதிவுசெய்திருப்பது நாம் கண்ட மிக சிறந்த தற்செயலான செயல்

By: Updated: August 25, 2020, 06:37:01 PM

கனடா நாட்டின் கடற்கரைக்கு அருகே மீன்பிடிக்கச் சென்ற தந்தையும்,மகளும் இரண்டு திமிங்கலங்கள் தண்ணீரிலிருந்து குதித்து காற்றில் நடனமாடிய  காட்சிகளை படம் பிடித்தனர் .

 

 

 

 

 

சியன் ரசில், மகள் சாரா இருவரும் நியூபவுண்ட்லாந்து (Newfoundland) ) தீவு கடற்கரையில் சில  கலவாய் மீன்களை பிடிக்க  படகில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஒரு திமிங்கலம் காற்றில் 360 டிகிரி ஸ்பின் செய்து மீண்டும் தண்ணீருக்குள்  சென்றது. சிரித்சு நேரம் கழித்து, மற்றோரு திமிங்கலமும் அதே போன்று காற்றில் டைவ் அடித்தது.

 

“திமிங்கலம் எங்கள் அருகில் வந்தது. எங்களை பயமுரயுத்தும் என்று தான் நாங்கள் முதலில் நினைத்தோம், ஆனால், அவைகள் எங்கள் படகின் அருகே டைவ் அடித்தது” என்று சியன் ரசில்  கூறினார்.

“இது மனதைக் கவரும் வகையில் இருந்தது” என்று அவரது 10 வயது மகள் சாரா குளோபல் நியூஸிடம் கூறினார். திமிங்கலம் இவ்வாறு நடந்து கொள்ளும் என்று எங்களுக்கு தெரியாது என்று கூறி ஆச்சரியமடைந்தார்.

இந்த வீடியோ, தற்போது மிகவும் வைரலாகி  வருகிறது.

 

 

 

பத்து வயது சிறுமியை குஷிபடுத்தும் நோக்கில், திமிங்கலம் மாறி மாறி டைவ் அடித்திருக்கலாம் என்ற சந்தேகம் கூட பார்ப்பவர்கள் மத்தியில்  எழுகிறது. அந்த துல்லியமான தருணத்தில்… இடத்தில் அவர்கள்  இந்த வீடியோவை  பதிவுசெய்திருப்பது நாம் கண்ட மிக சிறந்த தற்செயலான செயல் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Two whales jumping out of water and spinning in canadian coast viral video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X