New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/25/zbi23xmy6DYixxkJFfmv.jpg)
திருடிய நபர் வாகனத்துடன் ஒரு கடிதத்தையும் விட்டுச்சென்றுள்ளார்.
திருடிய நபர் வாகனத்துடன் ஒரு கடிதத்தையும் விட்டுச்சென்றுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே நான்கு நாட்களுக்கு முன்பு திருடப்பட்ட இருசக்கர வாகனம் மீண்டும் அதன் உரிமையாளர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிசயம் என்னவென்றால், திருடிய நபர் வாகனத்துடன் ஒரு கடிதத்தையும் விட்டுச்சென்றுள்ளார். அந்தக் கடிதத்தில், அவசரத் தேவைக்காக வாகனத்தை எடுத்துச் சென்றதாகவும், இதனால் வருந்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பயணத்தின் போது 450 கிலோமீட்டர் சென்றதால் ரூ.1,500 மதிப்புள்ள பெட்ரோலுக்கான பணத்தை வாகனத்தின் டேங்கில் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“நான் திருடியதை நினைத்து வருந்துகிறேன், எனவே திருடியதை நினைத்து நீங்களும் மறந்து விடுங்கள். இல்லை என்றால் வருத்தப்பட வைக்கப்படும்!" என கடிதத்தின் இறுதியில் எழுதியிருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, 'நூதன திருடன்' எனக் குறிப்பிடப்படும் அந்த நபர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.