New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/10/turkey-road-accident-4.jpg)
turkey road accident, துருக்கி
turkey road accident, துருக்கி
துருக்கி நாட்டில் நடந்து சென்றிருந்த பெண்கள், திடீரென நொருங்கிய நடப்பாதையால் பாதாள சாக்கடைக்குள் விழுந்த வீடியோ பார்பவர்களை பதர வைக்கிறது.
துருக்கியில் சாலையோரம் இரண்டு பெண்கள் சிரித்து மகிழ்ச்சியாக பேசிச் சென்றிருந்தனர். அந்நேரம் அவர்கள் நடந்து சென்றிருந்த சாலை கண் திடீரென நொருங்கியது. கண் இமைக்கும் நொடியில் அப்பெண்கள் இருவரும், நொருங்கிய சாலைக்குள்ளே புதைந்தனர்.
அது புதிதாக கட்டப்பட்ட நடைமேடை என்பதால் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. நேற்று மாலை நான்கு மணிக்கு நடந்த இந்த சம்பவம் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் உடனே அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அந்த இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர், முதலில் ஒரு பெண்னை சில நேரத்திலேயே மீட்டனர். ஆனால் இருவரில் ஒருவர் அதிக ஆழத்தில் விழுந்ததால் அவரை மீட்க மட்டும் 4 மணி நேரம் ஆகியுள்ளது.
விபத்துக்குள்ளான இரண்டு பெண்களில் ஒருவர் பெயர் டாக்டர் சூசன் குடெ பாலிக் என்றும், இனொருவர் பெயர் ஓஸ்லாம் துயாம்ஸ் என்றும் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவருக்கும் கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.