நாம் செய்தித்தாள்களில் எத்தனையோ திருட்டு சம்பவங்களைப் படித்திருப்போம், தொலைக்காட்சி செய்திகளில் பல திருட்டு சம்பவங்களின் வீடியோக்களைப் பார்த்திருப்போம். திருடர்களின் இயல்பு, அவர்கள் என்ன செய்வார்கள் என்பதையும் கேள்விப் பட்டிருப்போம். ஆனால், ஒரு வினோதமான திருடன் இங்கிலாந்தில், வேல்ஸின் மான்மவுத்ஷயரில் ஒரு பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து, அந்த பெண்ணின் சமையலறையில் உணவை சமைந்த்துள்ளான். உணவு சமைப்பதற்கு முன்பு பல வீட்டு வேலைகளை செய்து முடித்தான். அதன் பிறகு, அந்த வீட்டு உரிமையாளருக்கு ஒரு குழப்பமான குறிப்பை எழுத்தி வைத்து அந்த பெண்ணை குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.
பெயர் குறிப்பிடப்படாத வீட்டு உரிமையாளர் பெண் அவர் இல்லாத நேரத்தில் தனது வீட்டில் உள்ள பொருட்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தார். 36 வயதான வோஜ்னிலோவிச்ஸின் இந்த செயல் அந்த பெண்ணை மிகவும் பதற்றமடையச் செய்தது, அவர் தன் வீட்டில் இருக்க மிகவும் பயந்தார்.
கார்டிஃப் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்த தண்டனை விசாரணையில், டாமியன் வோஜ்னிலோவிச் செய்த ஒரு வினோதமான கொள்ளை பற்றிய விவரங்கள் வெளிவந்தன. அதில் பெயர் குறிப்பிட விரும்பாத வீட்டு உரிமையாளர் தனது தோட்டத்தில் பறவை தீவனங்கள் நிரப்பப்பட்டு பூச்செடி தொட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதைக் கண்டு குழப்பமடைந்தார்.
உள்ளே, ரிசைக்ளிங் பின்னில், ஒரு ஜோடி காலணிகள் அவிழ்த்து எறியப்பட்டிருப்பதை அவர் கண்டுபிடித்தாள், மேலும், அவளுடைய அலமாரியில் இருந்து பொருட்களைப் பயன்படுத்தி வீட்டு ஸ்டவ்வில் உணவு சமைக்கப்பட்டிருந்தது. மேலும், குளிர்சாதன பெட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. சமையலறை பாத்திரங்கள் கழுவும் தொட்டியில் வைக்கப்பட்டிருந்தன.
பாதிக்கப்பட்டவர் தனது பிரஷ் மாற்றப்பட்டிருந்தாகவும், தரையை சுத்தம் செய்திருந்ததாகவும் குறிப்பிட்டார். ஒரு ரெட் ஒயின் பாட்டில் மற்றும் ஒரு கிண்ணம் இனிப்புகள் வெளியே விடப்பட்டன, அதே நேரத்தில் ஒரு பக்கத்து வீட்டுக்காரர் யாரோ துணி துவைப்பதைக் கண்டதாகக் கூறினார்
வீட்டுக்குள் சென்று சமைத்து வைத்துவிட்டு, பொருட்களை ஒழுங்கு செய்துவிட்டு அதன் பிறகு, அந்த திருடன் “கவலைப்படாதே, சந்தோஷமாக இரு, சாப்பிடு” என்ற குறிப்பை என்று வைத்துவிட்டு வீட்டை விட்டு போயிருக்கிறான்.
ஜூலை 29-ல் இரண்டாவது திருட்டு நடந்தது, அங்கு சி.சி.டி.வி காட்சிகளில் வோஜ்னிலோவிச் சென்ற மற்றொரு வீட்டு உரிமையாளரை எச்சரித்தன. பின்னர் அவர் தனது ஆடைகளை துவைக்கவும் சுத்தம் செய்யவும் ஒரு கோடைகால இல்லத்தில் குளிப்பதற்குப் பயன்படுத்தினார்.
வோஜ்னிலோவிச் இரண்டு திருட்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். பொதுவான தாக்குதல், பொது ஒழுங்கு மீறல், ஆஜராகாதது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக அவருக்கு இதற்கு முன் நான்கு தண்டனைகள் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.