கடந்த 1 வாரமாக எந்த சேனலை திருப்பினாலும் அதிகம் தோன்றிய வசனம்.. “பாஸ்போர்ட் இல்லாமல் ஃபாரீனா?”.. இந்த விளம்பரத்தை கேட்டு கேட்டு அலுத்து போன பலருக்கும் கடைசியில் காத்திருந்தது அந்த மிகப்பெரிய அதிர்ச்சி.
’உதயம் பருப்பு வாங்கினால் வெளிநாடுக்கு போகலாம்’ என்று சரணவன் மீனாட்சி தம்பதிகள் வந்து சொல்லி சஸ்பென்ஸ்சை முடித்து வைத்தனர். சும்மாவே மீம்ஸ் போட்டு விளையாடும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு அல்வா வந்து வந்து அமைந்தது உதயம் பருப்பு ஃபரீன் விளம்பரம்.
கிடைச்சிடுச்சி இந்த வார டெம்ப்லேட் என்பது போல் வச்சி செய்துள்ளனர். இந்த மீஸ்கள் தான் இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.