Advertisment

புத்தகங்கள் படிப்பதால் விமர்சிக்கப்பட்ட 13 வயது மாணவன்... ஆதரவு தந்த எழுத்தாளர்கள்!

புகழ்பெற்ற எழுத்தாளர் நெய்ல் கெய்மனும் தன்னுடைய ஆதரவை அந்த மாணவனுக்கு தந்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
UK boy bullied for reading too many books

UK boy bullied for reading too many books

UK boy bullied for reading too many books :  இங்கிலாந்தில் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் படிக்கும் கல்லம் மன்னிங் (Callum Manning) என்ற மாணவன் அளவுக்கு அதிகமாக புத்தகங்களைப் படிப்பதையும், அது குறித்து தன்னுடைய கருத்துகளை பதிவு செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார். தன்னுடைய பழைய பள்ளியில் இருந்து வேறொரு பள்ளிக்கு மாற்றுதலாகியிருக்கும் கல்லமை, அவருடைய புதிய பள்ளி மாணவர்கள் கிண்டல் செய்துள்ளனர். இன்ஸ்டாகிராமை குறிப்பிட்டு பேசிய அவர்கள், ஒரு ப்ரைவேட் க்ரூப் சாட்டிலும் அவரை இணைத்து மேலும் கிண்டல் பதிவுகளையும், அவரை அவமதிக்கும் வகையிலும் நடந்துள்ளனர்.

Advertisment

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

ஆனால் அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் அவருடைய சகோதரி எல்லிஸ் லான்ட்ரெத் தன்னுடைய சகோதரருக்கு ஏற்பட்ட பிரச்சனையை சமூக வலைதளத்தில் பதிவு செய்தார். அதில் “இந்த காலத்து குழந்தைகள் எப்படியெல்லாம் இருக்கின்றார்கள். என்னுடைய சகோதரர்கள், அவர்கள் படிக்கும் புத்தகங்களைப் பற்றியும், அது குறித்த விமர்சனங்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வந்தனர். ஆனால் அவருடைய புதிய பள்ளி நண்பர்கள், அவரை "Sad Weirdo" என கிண்டல் செய்தது மட்டுமின்றி க்ரூப் சாட்டிலும் இணைத்து அவமதிக்கும் வகையில் பேசியுள்ளனர் என்று பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவு சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவியதோடு மட்டுமின்றி, கல்லமின் இன்ஸ்டா ஃபாலோவர்களின் எண்ணிக்கையும் 3 லட்சம் வரை அதிகரித்துள்ளது. மேலும் எழுத்தாளர்கள், புத்தக பதிப்பாளர்கள், புத்தக கடைக்காரர்கள் கல்லமை ஆதரித்து ட்வீட் செய்துள்ளனர். வாட்டர்ஸ்டோன்ஸ் அவருக்கு நிறைய புத்தகங்களையும் அனுப்பியுள்ளது. புகழ்பெற்ற எழுத்தாளர் நெய்ல் கெய்மனும் தன்னுடைய ஆதரவை அந்த மாணவனுக்கு தந்துள்ளார்.

புத்தகங்கள் படிப்பது மிகவும் நல்லது. அது உங்களுக்கு வாழ்வின் மற்றொரு பக்கத்தை, அறிவை, சிந்திக்கும் ஆற்றலை, மாற்று சிந்தனைகளை வளர்க்கும். இந்த காலத்தில் புத்தகங்கள் படிப்பவர்களை ஒரு மாதிரியாக பார்ப்பதும், புத்தகங்களை வெறுத்து  ஒதுக்குவதும் ஒரு கலாச்சாரமாக வளர்ந்து வருகிறது. இது வருங்கால சந்ததியின் அறிவுசார் நடவடிக்கைகளுக்கு நல்லதில்லை.

England
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment