இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஸ்டெல்லா க்ரீஸி. இங்கிலாந்தின் மக்களவை உறுப்பினராக பணியாற்றும் அவர் திங்கள் கிழமை அன்று நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்க தன்னுடைய மூன்று மாத ஆண் குழந்தையுடன் பாராளுமன்றம் வந்துள்ளார். Buy-now-pay-later வாடிக்கையாளர் திட்டம் குறித்த விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற க்ரீஸியை தன்னுடைய மார்போடு கட்டியபடி பேசினார்.
Advertisment
இந்நிலையில் நேற்று அவருக்கு இங்கிலாந்து பாராளுமன்றம் அனுப்பிய கடிதத்தில் வருகின்ற காலத்தில் பாராளுமன்றத்திற்கு குழந்தையை எடுத்துவர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த வர் பாராளுமன்ற விதிமுறை புத்தகங்களில் கட்டாய மாற்றம் தேவை என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்பு தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் பாராளுமன்ற வளாகத்திற்குள் எடுத்து வந்துள்ள ஸ்டெல்லாவிற்கு இந்த கடிதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "மிகவும் அமைதியாக தூங்கிக் கொண்டிருந்த என்னுடைய 3 வயது மகனை பாராளுமன்றத்திற்குள் கொண்டு வரக்கூடாது" என்று பாராளுமன்றத்தில் ஒரு எழுதப்பட்ட விதிமுறை உள்ளது என்று ட்வீட் செய்து தனக்கு வந்த கடிதத்தையும் பகிர்ந்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்கெல்லாம் தாயாக இருக்கும் நாடாளுமன்றத்தில் பணியாற்றும் தாயார்கள் இதனை கண்டும் காணாமல் இருக்கின்றார்கள் என்று இதர பெண் எம்.பிக்கள் குறித்தும் தன்னுடைய வருத்தத்தை அவர் பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக பி.பி.சி.யில் பேசிய அவர், எனக்கு பேறுகால விடுப்பு இல்லை. எனக்கு ஊழியர்களுக்கான உர்மைகள் இல்லை. இது நம்முடைய ஜனநாயகத்திற்கு கேடானது என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் விவாத பொருளாக மாறிய நிலையில் பல்வேறு துறையில் பணியாற்றும் பல தரப்பட்ட பெண்களும் தங்களின் பேறுகால விடுப்பு மற்றும் அதற்கு பிந்தைய பணியாற்றும் சூழலில் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் தங்களின் கருத்துகளை பகிர்ந்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil