உக்ரைன் விவகாரம்: கண் முன்னே தாக்கப்பட்ட சொந்த வீடு... மனம் தளராமல் “லைவ்”-ல் பேசிய ரிப்போட்டர்
கள நிலவரம் இது தான் என்று உலக மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டிய சூழலில் இருக்கும் பத்திரிக்கையாளர்கள் நாட்டை விட்டு நகராமல் போரின் கோர பிடியில் இருக்கும் உக்ரைனின் நிலவரத்தை கூறி வருகிறனர்.
Ukrainian journalist with BBC tears up: வியாழக்கிழமை சூரிய உதயத்திற்கு முன்பே உக்ரைன் மீது தாக்குதலை துவங்கியது ரஷ்யா. பொது மக்கள் அச்சம் அடைந்து பாதாள சுரங்கங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் அண்டை நாடுகளை நோக்கி நகர்ந்து வருகின்றனர். ஆனாலும் கள நிலவரம் இது தான் என்று உலக மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டிய சூழலில் இருக்கும் பத்திரிக்கையாளர்கள் நாட்டை விட்டு நகராமல் போரின் கோர பிடியில் இருக்கும் உக்ரைனின் நிலவரத்தை கூறி வருகிறனர்.
Advertisment
பி.பி.சி. உக்ரைனில் பணியாற்றி வரும் ஒல்கா மல்செவ்ஸ்கா தற்போது உக்ரைனில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்து லைவில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே, தாக்குதலுக்கு ஆளான இடங்களை காட்டி, இன்று அழிக்கப்பட்டத்தில் எங்கள் வீடும் ஒன்று என்று குறிப்பிட்டார். லண்டன் ஸ்டூடியோவில் இருந்து ஒளிபரப்பட்ட இந்த லைவில் தொடர்ந்து பேசிய ஓல்கா, நாங்கள் வாழ்ந்த வீடு தானா என்பதை என்னால் நம்பவே இயலவில்லை” என்று கூறுகிறார்.
அதே சமயத்தில் அவருடைய அம்மா அவருக்கு குறுஞ்செய்தி அனுப்ப அதை படித்த அவர், என்னுடைய அம்மா மற்றொரு கட்டிடத்தின் தரைதளத்தில் தங்கியுள்ளார். நல்ல வேளையாக அவர் எங்கள் வீட்டில் இல்லை என்று நிம்மதி பெருமூச்சு அடைகிறார் அந்த பத்திரிக்கையாளர்” என்று அவர் கூற இதனை பார்த்த உலகமே அதிர்ச்சியில் உரைந்து போனது.
லண்டன் நேரப்படி அதிகாலை மூன்று மணிக்கு ஸ்டுடியோவிற்கு வர ஒப்புக் கொண்டேன். ஆனால் இங்கு வந்து லைவை ஒளிபரப்பிய போது எங்களின் இருப்பிடம் தாக்கப்பட்டதை நான் கண்டேன் என்று உடையும் காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நல்லவேளையாக அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil