உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ச்சியாக 6 ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் வீரர்களும், பொதுமக்களும் துணிச்சலுடனும் தைரியத்துடனும் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், உக்ரைனை சேர்ந்த ஒருவர், சாலையில் கிடந்த கண்ணிவெடியை கைகளால் அகற்றிய காணொலி வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
38 வினாடிகள் கொண்ட வீடியோ கிளிப்பில், ஜீன்ஸ் மற்றும் கருப்பு ஜாக்கெட் அணிந்த நபர், கையில் கண்ணிவெடியுடன் சாலையைக் கடக்கிறார். வாயில் சிக்ரெட்டை வைத்துக்கொண்டே, அதனை அருகிலிருக்கும் வனப்பகுதியில் வைத்துவிட்டு வருகிறார்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் இருந்த கண்ணிவெடியை, ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் வைத்து, பெரும் சேதம் ஏற்படுவதை தடுத்துள்ளார்.
இந்த வீடியோவை பகிர்ந்த The New Voice of Ukraine என்கிற செய்தி நிறுவனம், பெர்டியான்ஸ்கில் உக்ரேனியர் ஒருவர், சாலையில் கண்ணிவெடியை பார்த்துள்ளோம். வெடிகுண்டு அகற்றும் நிபுணர் குழு வருவதை வரை காத்திருக்காமல், உயிரை பணயம் வைத்து, கண்ணிவெடியை அப்புறப்படுத்தி, உக்ரைன் ராணுவத்திற்கு வழியை கிளியர் செய்துள்ளனர் என தெரிவித்துள்ளது. இந்த வீடியோ, 2.6 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது.
இதற்கிடையில், கார்கிவ் மற்றும் கிவ் இடையே உள்ள ஓக்திர்காவில் உள்ள ராணுவ தளத்தில் 70 க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள், ரஷ்ய பீரங்கிகள் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil