உக்ரைன் சாலையில் கார் மீது ஏறிச் சென்ற போர் டாங்கி… வைரல் வீடியோ

வீடியோவில் உள்ள டாங்கி, ரஷ்யாவுக்கு சொந்தமானதா அல்லது உக்ரைனுக்கு சொந்தமானதா என்பது உறுதியாக தெரியவில்லை.

வீடியோவில் உள்ள டாங்கி, ரஷ்யாவுக்கு சொந்தமானதா அல்லது உக்ரைனுக்கு சொந்தமானதா என்பது உறுதியாக தெரியவில்லை.

author-image
WebDesk
New Update
உக்ரைன் சாலையில் கார் மீது ஏறிச் சென்ற போர் டாங்கி… வைரல் வீடியோ

உக்ரைனில் 4வது நாளாக போரில் ஈடுபட்டுள்ள ரஷ்ய ராணுவம், தலைநகர் கீவ்வை கைப்பற்ற தீவிரமாக போராடி வருகிறது. உக்ரைனின் அனைத்து பகுதிகளிலும் தாக்குதல் நடத்த ரஷ்ய படைகளுக்கு அந்நாட்டு ராணுவம் உத்தரவிட்டுள்ளது

Advertisment

இந்நிலையில், கீவ் நகரில் சாலையில் சென்ற கார் மீது ராணுவ டாங்கி ஏறி செல்லும் காணொலி சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோவில் பார்கையில், பீரங்கி டாங்கி ரிவர்ஸ் எடுப்பதற்கு முன்பு, உக்ரைன் நாட்டினரின் கார் மீது ஏறி, அதனை அப்பளம் போல் நொறுக்கி செல்வதை காண முடிகிறது. மேலும், வீடியோ எடுப்போர் பயத்தில் அழுதப்படி சத்தம் போடுவதையும் கேட்க முடிகிறது.

Advertisment
Advertisements

மற்றொரு வீடியோவில், இந்த விபத்தில் காரில் சிக்கியிருந்த முதியவரை அப்பகுதி மக்கள் பத்திரமாக மீட்கும் காட்சிகளை உள்ளன.

இருப்பினும், வீடியோவில் உள்ள டாங்கி, ரஷ்யாவுக்கு சொந்தமானதா அல்லது உக்ரைனுக்கு சொந்தமானதா என்பது உறுதியாக தெரியவில்லை.

உக்ரைன் கடந்த நான்கு நாட்களாக ரஷ்ய படையெடுப்பை எதிர்த்துப் போராடி வருகிறது. ரஷ்ய தாக்குதலில் ராணுவ வீரர்கள் உட்பட 200 உக்ரைனியர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Social Media Viral Ukraine Russia

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: