முடி திருத்துபவரின் நேர்மைக்குக் கிடைத்த பரிசு! அசந்து போன பிரபலம்!

எல்லாம் முடிந்த பிறகு, பணம் எவ்வளவு? என்று கேட்க, '20 ரூபாய் கொடுங்கள்' என்றார்.

எல்லாம் முடிந்த பிறகு, பணம் எவ்வளவு? என்று கேட்க, '20 ரூபாய் கொடுங்கள்' என்றார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Unbelievable But True! This Norwegian YouTuber Paid ₹28000 For a Haircut In Ahmedabad - நேர்மைக்கு கிடைத்த பரிசு! தலைக்கு வந்தது கிரீடத்தோடு போனது!

Unbelievable But True! This Norwegian YouTuber Paid ₹28000 For a Haircut In Ahmedabad - நேர்மைக்கு கிடைத்த பரிசு! தலைக்கு வந்தது கிரீடத்தோடு போனது!

நார்வேயைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஹரால்ட் பால்ட், இந்தியாவில் முடி திருத்துபவர் ஒருவருக்கு ரூ.28,000 ஊதியமாக அளித்திருக்கிறார்.

Advertisment

நார்வே நாட்டைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஹரால்ட் பால்ட் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்திருந்தார். அகமதாபாத் நகரில் வலம் வந்த ஹரால்ட், அங்கிருந்த சாலை ஓர முடி திருத்தும் கடைக்குச் சென்று தனது முடி வெட்டுமாறு கூறினார்.

ஹரால்ட் ஆங்கிலத்தில் பேசினாலும், அதை புரிந்து கொண்டு, அவர் விரும்பியது போல் முடி வெட்டினார் அந்த முடி திருத்துபவர். எல்லாம் முடிந்த பிறகு, பணம் எவ்வளவு? என்று கேட்க, '20 ரூபாய் கொடுங்கள்' என்று அவர் பதிலளித்திருக்கிறார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத ஹரால்ட், புதிதாக உங்களிடம் முடி வெட்ட வந்திருக்கும் என்னிடம், நீங்கள் நினைத்திருந்தால் அதிகமாக கட்டணத் தொகையை கூறியிருக்க முடியும். நானும், மறுக்காமல் கொடுத்திருப்பேன். ஆனால், நீங்களோ நேர்மையாக, 20 ரூபாய் என்கிறீர்கள்.

Advertisment
Advertisements

இந்த நேர்மைக்கு பரிசு இந்தாருங்கள் என்று கூறி, முடி திருத்துபவரின் கைகளில் 400 டாலர்களை வைத்திருக்கிறார். இந்திய மதிப்பில் அதன் விலை 28,000 ரூபாய்.

இந்த பணத்தை வைத்து, உங்கள் கடையை இன்னும் மேம்படுத்துங்கள் என்று கூறி இருக்கிறார். அசந்துபோன கடைக்காரர், அப்போது கூட ஒரு டீ வாங்கிக் கொடுத்து தனது நன்றியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Ahmedabad

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: