இவ்வளவு சீக்கிரமா 96 படத்தை சன் டிவியில் போடலாமா? த்ரிஷா கேட்கும் கேள்வி!

96 படத்தை தொலைக்காட்சியில் திரையிடுவது நியாயமல்ல என்று நாங்கள் நினைக்கிறோம்.

96 படத்தை தொலைக்காட்சியில் திரையிடுவது நியாயமல்ல என்று நாங்கள் நினைக்கிறோம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
96 திரைப்படம்

96 திரைப்படம்

தீபாவளி திருநாளையொட்டி சன் டிவி தொலைக்காட்சியில் 96 திரைப்படம் ஒளிப்பரப்பபடுகிறது. இந்த ஒளிப்பரப்பை தள்ளி வைக்கும்படி நடிகை த்ரிஷா ட்விட்டரில் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

Advertisment

96 திரைப்படம் சன் டிவியில்:

தீபாவளி என்றாலே  புத்தாடை, பலகாரம், பட்டாசு. இதற்கு அடுத்தப்படியாக நம் நினைவில் வருவது தொலைக்காட்சிகளில்  ஒளிப்பரப்பாகும் புதுப்படங்கள்.. “தீபாவளி திருநாளை முன்னிட்டு திரைக்கு வந்து சில மாதங்களே ஆன புத்தம் புதிய சூப்பர் ஹிட் திரைப்படம்” என கனத்த குரலில் ஒளிப்பரப்பாகும் விளம்பரத்திற்காகவே காத்திருந்த மக்கள் ஏராளம்.

குறிப்பாக சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் படம்  என்னவென்று தெரிந்த பின்பு தான், பலரும்  வெளியே செல்வது,  திரையரங்குளுக்கு செல்வது என அனைத்தையும் திட்டம் ஈடுவார்கள். இன்றளவு இந்த நடைமுறை நடுத்தர வர்த்த குடும்பங்களில் இருந்து வருகிறது.

இந்நிலையில், நேற்றைய தினம்,  சன் டிவி தொலைக்காட்சியில் திரைக்கு வந்து சில நாட்களே ஆன 96 திரைப்படம் ஒளிப்பரப்படுவதாக விளம்பரம் வெளியானது. இதைப்பார்த்த பொதுமக்கள் பலருக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment
Advertisements

படத்தை பார்க்க நினைப்பவர்களுக்கு இது சாதகம் போல தெரிந்தாலும், படக்குழுவைச் சேர்ந்தவர்களுக்கு அப்படி இல்லை என்பதை அனைவராலும் மறுக்க முடியாது. காரணம், 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

96 திரைப்படம் 96

இந்நிலையில், இந்த படம்   தொலைக்காட்சியில் ஒளிப்பரப்படுவது குறித்து நடிகை த்ரிஷா  எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுக் குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில்,

"படம் வெளியாகி இது எங்களுக்கு 5வது வாரம். இன்னும் அனைத்து திரையரங்குகளிலும் 80 சதவீதம் நிரம்புகிறது. இவ்வளவு சீக்கிரம் 96 படத்தை தொலைக்காட்சியில் திரையிடுவது நியாயமல்ல என்று நாங்கள் நினைக்கிறோம். தயவு செய்து இதை பொங்கலுக்கு தள்ளி வையுங்கள் என்பது எங்கள் கோரிக்கை. செய்தால் நன்றியுடன் இருப்பேன். #Ban96MoviePremierOnSunTv" என்று த்ரிஷா ட்வீட் செய்துள்ளார்.

த்ரிஷாவின் இந்த பதிவுக்கு 96 படத்தின் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Diwali Tamil Cinema Trisha

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: