Advertisment

ராகுல் தைத்த செருப்புக்கு ரூ.10 லட்சம் ஆஃபர்; ‘பொக்கிஷத்தை விற்கமாட்டேன்’ செருப்பு தைக்கும் தொழிலாளி நெகிழ்ச்சி

ராகுல் காந்தியின் வருகைக்கு பிறகு, செருப்புத் தைக்கும் தொழிலாளி ராம்சைத் ஒரே நாளில் பிரபலமானார். அவரது கடையில் ராகுல் காந்தி தைத்த செருப்புக்கு ரூ. 10 லட்சம் வரை தருவதாக பலர் முன்வந்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
cobler

ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவில் ராகுல் காந்தி.

ராகுல் காந்தியின் வருகைக்கு பிறகு, செருப்புத் தைக்கும் தொழிலாளி ராம்சைத் ஒரே நாளில் பிரபலமானார். அவரது கடையில் ராகுல் காந்தி தைத்த செருப்புக்கு ரூ. 10 லட்சம் வரை தருவதாக பலர் முன்வந்துள்ளனர். ஆனால், ராகுல் காந்தி தைத்த காலணியை ஒரு பொக்கிஷமாக, நினைவுப் பரிசாக வைத்திருப்பதாக ராம்சைத் உறுதியளித்துள்ளார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: UP cobbler’s fame soars after meeting Rahul Gandhi; offered Rs 10 lakh for slippers

கடந்த வாரம் முதல், செருப்புத் தைக்கும் தொழிலாளியான ராம்சைத் இணையம் முழுவதும் அவரது நேர்காணல்கள் மற்றும் புகைப்படங்களால் நிரம்பி ஊர் முழுவதும் அவரது பேச்சாக உள்ளது. தொலைதூர மக்களிடமிருந்து அழைப்புகள் மற்றும் படங்களுக்கான கோரிக்கைகளால் அவரது தொலைபேசி ஒலிக்கிறது. சுல்தான்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு அருகில் அமைந்துள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஜூலை 26-ம் தேதி தனது கடைக்கு வந்த பிறகு ராம்சைத்தின் வாழ்க்கை வியத்தகு முறையில் மாறியது.

ராகுல் காந்தி, டெல்லி செல்லும் வழியில், ராம்சைத்தின் சிறு காலணி தைக்கும் பெட்டி கடையில் எதிர்பாராத விதமாக நிறுத்தினார். ராகுல் காந்தியின் இந்த அரை மணி நேர வருகை ராம்சைத்துக்கு நேசத்துக்குரிய நினைவாக மாறியது. ராகுல் காந்தி ராம்சைத்துடன் அன்புடன் பேசியது மட்டுமல்லாமல், செருப்பு தைப்பதைக் கற்றுக்கொடுக்கச் சொல்லி கற்றுக்கொண்டு ஒரு ஜோடி செருப்பு தைத்தார்.

செருப்பு தைக்கும் தொழிலாளி ராம்சைத் வீடியோ:

ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் ராம்சைத்தைப் பற்றிய ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளது, “ராகுல் காந்தியால் தைக்கப்பட்ட செருப்புகளை நிறைய பேர் கேட்கிறார்கள்” எனக் கூறுகிறார். அதற்கு விலையாக ரூ.10 லட்சம் வரை தர முன்வந்துள்ளார்கள்  எனக் கூறும் செருப்பு தைக்கும் தொழிலாளி ராம்சைத், “மக்கள் என்னுடன் செல்ஃபி எடுக்கிறார்கள். ராகுல் காந்தி என்னை தொடர்பு கொண்டார். அந்த செருப்பைக் கேட்டு நிறைய அழைப்புகள் வருகின்றன... எனக்கு அந்த செருப்புக்கு ரூ. 10 லட்சம் வரை தருவதாகக் கூறுகிறார்கள். ஆனால், அந்த வாய்ப்பை நான் மறுத்துவிட்டேன். அந்த செருப்பை யாருக்கும் கொடுக்க மாட்டேன். நான் அதை ஃப்ரேம் செய்து என் கடையில் பாதுகாப்பேன்…” என்று கூறினார்.

பூர்வாஞ்சல் விரைவுச்சாலை வழியாக டெல்லி செல்லும் வழியில் சுல்தான்பூர் வழியாகச் செல்லும் போது,  ராகுல் ​​காந்தி, ராம்சைத்தின் கடையில் எதிர்பாராத விதமாக நிறுத்தினார். ராகுல் காந்தி சிறிது நேரம் ராம் சைத்துடன் குளிர் பானத்தைப் பகிர்ந்துகொண்டு அவரது கவலைகளைக் கேட்டார்.

ராம்சைத், குறைவான வருமானம் மற்றும் கட்டுப்பாடான வாழ்க்கை முறையுடன் போராடி வருவதாகக் கூறினார். அவருடைய அவல நிலையைக் கண்டு நெகிழ்ந்த காந்தி, உதவி செய்வதாக உறுதியளித்தார். அவர் சொன்னதை உண்மையாக்கி, மறுநாள், ராம்சைத்தின் சுமைகளைக் குறைத்து, அவரது வாழ்வாதாரத்தை ஆதரிப்பதற்காக, ஒரு மின்சார ஷூ தைக்கும் இயந்திரத்தை ராம்சைத்திற்கு பரிசளித்தார்.

“என் உலகம் முற்றிலும் மாறிவிட்டது. இதற்கு முன்பு என்னை யாருக்கும் தெரியாது. ஆனால், இப்போது மக்கள் எனது கடைக்கு வந்து என்னுடன் செல்ஃபி எடுக்கிறார்கள்” என்று ராம்சைத் கூறியதாக பி.டி.ஐ செய்தி நிறுவம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், ராகுல் காந்தி தைத்த செருப்புகளை விற்கப் போவதில்லை என்ற தனது முடிவில் ராம்சைத் உறுதியாக இருக்கிறார். “காலணிகளுக்கு விலை நிர்ணயம் செய்யும்படி பலர் என்னிடம் கேட்டுள்ளனர். விலைமதிப்பற்ற சொத்து என்றும், அதை விற்கத் திட்டமிடவில்லை என்றும் அவர்கள் அனைவரிடமும் கூறினேன்” என்று ராம்சைத் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rahul Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment