/indian-express-tamil/media/media_files/2025/10/23/fatehabad-toll-2025-10-23-07-15-24.jpg)
உத்தரப் பிரதேசம், ஃபதேஹாபாத் சுங்கச்சாவடி ஊழியர்கள் ரூ.1,100 தீபாவளி போனஸ் வழங்கியதற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தரப் பிரதேசம், ஃபதேஹாபாத் சுங்கச்சாவடி ஊழியர்கள் ரூ.1,100 தீபாவளி போனஸ் வழங்கியதற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்தில்தான் சுங்கச்சாவடியை எடுத்ததால், ஊழியர்களுக்கு முழு ஆண்டுக்கான போனஸ் கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் ஃபதேஹாபாத் பகுதியில் உள்ள ஆக்ரா–லக்னோ விரைவுச்சாலையில் திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் கடந்து சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சுங்கச்சாவடி ஊழியர்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் அனைத்து வாயில்களையும் திறந்துவிட்டதால் இந்த அசாதாரண நிலை ஏற்பட்டது என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த எதிர்பாராத குழப்பம் பெரிய போக்குவரத்து இடையூறுகளை ஏற்படுத்தியது. இதைக் கட்டுப்படுத்தவும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
ஸ்ரீ சைன் & தத்தார் நிறுவனம் நடத்தும் ஃபதேஹாபாத் சுங்கச்சாவடியில் பணிபுரியும் சுமார் 21 ஊழியர்கள் தீபாவளி போனஸாக வெறும் ரூ.1,100 மட்டுமே பெற்றதால் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமீப மாதங்களில் சுங்கச்சாவடியின் வருமானத்தை ஒப்பிடுகையில் இந்தத் தொகை மிகவும் குறைவாக இருப்பதாக ஊழியர்கள் உணர்ந்தனர் என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
அக்டோபர் 19-ம் தேதி இரவு 10 மணியளவில் தன்தேரஸ் போக்குவரத்து குவிந்தபோது, ஊழியர்கள் தடுப்புகளைத் எடுத்துவிட்டுப் பணியிலிருந்து விலகியதால், பிளாசாவின் அனைத்துப் பாதைகளும் திடீரெனத் திறந்துவிடப்பட்டன. மிகக் குறைவான பண்டிகைக் கால ஊக்கத்தொகைக்கு" எதிரான போராட்டம் என்று ஊழியர்கள் விவரித்த இந்த நடவடிக்கையின் காரணமாக, சுமார் 5,000 வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் கடந்து சென்றன.
வீடியோவைப் பாருங்கள்:
🚨 SHOCKER! Angry over just ₹1,100 Diwali bonus, toll staff at the Agra–Lucknow Expressway LIFTED all BARRIERS — thousands of vehicles sped through without PAYING toll 🤯 pic.twitter.com/BS2elFfu8Q
— Megh Updates 🚨™ (@MeghUpdates) October 21, 2025
இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் விரைவில் வைரலானது. கருத்து தெரிவித்தவர்கள் பல்வேறு விதமான எதிர்வினைகளைக் கொண்டிருந்தனர்: ஒருவர், “இது ஒரு ஜப்பானிய பாணி போராட்டம். கோரிக்கைகள் நிறைவேறும் வரை நிரந்தரமாக மூடுவதை விட இது சிறந்தது” என்று எழுதினார். மற்றொருவர், “ப்ரோ இன்போசிஸ் மற்றும் டி.சி.எஸ் போன்ற நிறுவனங்கள் கூட தங்கள் ஊழியர்களுக்கு இவ்வளவு போனஸ் கொடுப்பதில்லை” என்று குறிப்பிட்டார். மூன்றாவது நபர், “இந்த ஊழியர்களை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும்... இந்த இழப்பை ஊழியர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.
சுங்கச்சாவடியை சமீபத்தில் தான் எடுத்துக் கொண்டதால், முழு ஆண்டுக்கான போனஸ் வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று நிறுவனம் விளக்கமளித்தது. இருப்பினும், ஊழியர்கள் இந்தக் கருத்தை உறுதியாக ஏற்கவில்லை. ஒரு ஊழியர், “கடந்த ஆண்டு எங்களுக்கு ரூ.5,000 கிடைத்தது. இந்த ஆண்டு வெறும் ரூ.1,100 தான் கிடைத்தது” என்று கூறினார். மற்றொருவர், “நாங்கள் 12 மணி நேர ஷிஃப்ட்டில் டீசல் புகையை சுவாசித்துக் கொண்டும், கோபமான ஓட்டுநர்களைக் கையாண்டும் வேலை செய்கிறோம். நாங்கள் தங்க நாணயங்கள் கேட்கவில்லை. வெறும் சில்லறை காசு போல இல்லாமல், ஒரு மரியாதையான தொகை கேட்டோம்.” என்றார்.
ஆரம்பத்தில், நிர்வாகம் அருகில் உள்ள சுங்கச்சாவடிகளில் இருந்து ஊழியர்களை அழைத்து வர முயன்றது, ஆனால் ஆதரவாக வந்த குழுவினர் திருப்பி அனுப்பப்பட்டனர். இரவு 11 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நிலைமையை மதிப்பிட்டனர், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று முடிவு செய்தனர். ஃபதேஹாபாத் காவல் நிலைய அதிகாரி தர்மேந்திர குமார், “அங்கு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எதுவும் இல்லை. அவர்கள் வாயில்களைத் திறந்துவிட்டனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது ஒரு போராட்டம், குற்றம் அல்ல” என்று கூறினார்.
நள்ளிரவு வாக்கில், மூத்த அதிகாரிகள் 10 சதவீத சம்பள உயர்வுக்கு உறுதியளித்த பின்னர் பதற்றம் தணிந்தது. சுங்கச்சாவடியில் தடுப்புகள் கீழே இறக்கப்பட்டன, சுங்கச்சாவடி செயல்பாடுகள் மீண்டும் தொடங்கப்பட்டு, பிளாசா இயல்பு நிலைக்குத் திரும்பியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us