/indian-express-tamil/media/media_files/2024/11/04/yfWNmopR0oie0fuki8x0.jpg)
மதுராவில் கோயில் ஒன்றில் ஓட்டை வழியே சொட்டு சொட்டாக வழிந்த ஏ.சி தண்ணீரை, கோயிலுக்கு வந்த மக்கள் புனித தீர்த்தம் என நினைத்து வரிசைகட்டி குடித்து தலையில் தேய்த்து சென்ற வீடியோ
உத்தரப் பிரதேசம், மதுராவில் உள்ள கோயில் ஒன்றில் ஓட்டை வழியே சொட்டு சொட்டாக வழிந்த ஏ.சி தண்ணீரை, கோயிலுக்கு வந்த மக்கள் புனித தீர்த்தம் என நினைத்து வரிசைகட்டி குடித்து தலையில் தேய்த்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மதுராவில் கோயில் ஒன்றில் ஓட்டை வழியே சொட்டு சொட்டாக வழிந்த ஏ.சி தண்ணீரை, கோயிலுக்கு வந்த மக்கள் புனித தீர்த்தம் என நினைத்து வரிசைகட்டி குடித்து தலையில் தேய்த்து சென்ற வீடியோ
உத்தரப் பிரதேசம், மதுராவில் கோயில் ஒன்றில் ஓட்டை வழியே சொட்டு சொட்டாக வழிந்த ஏ.சி தண்ணீரை, கோயிலுக்கு வந்த மக்கள் புனித தீர்த்தம் என நினைத்து வரிசைகட்டி குடித்து தலையில் தேய்த்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேசம், மதுரா நகரில் பிரசித்தி பெற்ற பங்கே பீஹாரி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சுவரில் யானை துதிக்கை வடிவில் அமைக்கப்பட்டிருந்த கட்டமைப்பிலிருந்து திடீரென தண்ணீர் சொட்டு சொட்டாக ஒழுகியது. இந்த தண்ணீர் கோயில் உள்ளே இருக்கும் கிருஷ்ணரின் காலில் இருந்து வரும் புனித தீர்த்தம் என்று நினைத்த கோயிலுக்கு வந்த பக்தர்கள், அந்த தீர்த்தத்தைக் குடிப்பதால் பிரச்சனைகள் தீரும் என்று நம்பிய பக்தர்கள் வரிசையில் நின்று குடித்தனர்.
ஆனால், அது கிருஷ்ணரின் காலில் இருந்து வந்த தீர்த்தம் அல்ல. உண்மையில் உள்ளே அமைக்கப்பட்டிருந்த ஏசி-யில் இருந்து தண்ணீர் வெளியேறும் குழாய் அந்த யானை துதிக்கை கட்டமைப்போடு இணைக்கப்பட்டுள்ளது.
இந்த ஏ.சி மெஷினில் இருந்து சொட்டு சொட்டாக வெளியேறிய நீரையே தீர்த்தம் என்று பக்தர்கள் குடித்தனர் என்று தெரியவந்தது.
இந்நிலையில், மதுராவில் கோவிலில், ஏ.சி-யில் இருந்து வெளியேறிய தண்னீரைக் மக்கள் வரிசைக் கட்டி நின்று பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.