யூடியூபர் குல்சார் ஷேக் அபாயகரமான பொருட்களை ரயில்வே தண்டவாளத்தில் வைப்பது போன்ற ஒரு வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் கோபத்தை ஏற்படுத்திய நிலையில், பொது பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவித்ததற்காகவும், சட்டங்களை மீறியதற்காகவும் யூடியூபர் கைது செய்யப்படுவதற்கு வழிவகுத்தது.
பா.ஜ.க தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லாவின் புதிதாக உருவாக்கப்பட்ட லீகல் ஹிந்து டிஃபென்ஸ் குழுவின் புகாரின் பேரில் யூடியூபர் குல்சார் ஷேக் கைது செய்யப்பட்டார்.
ஒரு யூடியூபரின் சமீபத்திய வீடியோ, பல ரயில் தடம் புரண்டதற்கும், விபத்துக்களாலும் சர்ச்சைகளில் சிக்கியுள்ள இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு குறித்த கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது. இன்ஸ்டாகிராமில் (@jist.news) பகிரப்பட்ட வீடியோவில் குல்சார் ஷேக் என அடையாளம் காணப்பட்ட நபர், பல்வேறு அளவுகளில் கற்கள் மற்றும் பிற பொருட்களை ரயில் தண்டவாளத்தின் மீது வைப்பதைக் காட்டுகிறது.
குல்சார் ஷேக், வீடியோவில், முகமூடி அணிந்து, சிறிய கேஸ் சிலிண்டர், டிஷ் சோப்பு மற்றும் நடைபாதைக் கல்லை தண்டவாளத்தில் வைத்து, ரயில் கடந்து செல்வதற்காகக் காத்திருப்பதை வீடியோவில் பார்க்க முடிகிறது. அவர் ஒரு சண்டைக்காக ஒரு கோழியை தண்டவாளத்தில் கட்டும்போது நிலைமை மோசமாகிறது. வீடியோ திடீரென துண்டிக்கப்பட்டது அது பார்வையாளர்களை வேதனைக்கு உள்ளாக்கி திகிலடையச் செய்கிறது.
எக்ஸ் பயனர் “ டிரயின் வாலே பையா, (TrainWaleBhaiya) குல்சார் ஷேக்கின் பொறுப்பற்ற நடத்தையை அம்பலப்படுத்தும் வீடியோவை வெளியிட்டபோது சர்ச்சை வெடித்தது. “உ.பி., லால்கோபால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த குல்சார் ஷேக் என்பவர், யூடியூப் பணத்துக்காக ரயில்களின் முன், ஆயிரக்கணக்கான பயணிகளின் உயிரை ஆபத்தில் ஆழ்த்துகிறார்” என்று அந்த வீடியோ பயணிகளுக்கு ஏற்படும் ஆபத்துகளை எடுத்துக்காட்டுகிறது. இந்த பதிவு இந்திய ரயில்வே மற்றும் உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து உடனடி நடவடிக்கையைத் தூண்டியது.
இந்த வீடியோவுக்கு பதிலளித்த ஒரு பயனர், “கூடிய விரைவில், இதற்காக அவர் சிறையில் அடைக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு இன்ஸ்டாகிராம் பயனர் எழுதினார், “ஒரு நாட்டில் வாழும் அனைத்து அடிப்படை உணர்வையும் இழந்த அத்தகைய செல்வாக்கு செலுத்துபவர்கள் / யூடியூபர்கள் அனைவரையும் கைது செய்யுங்கள்.” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மூன்றாவது பயனர், “அப்படியானால் அவர் பார்வைகளைப் பெற்றாரா? இந்த அசிங்கத்தை யார் முதலில் பார்ப்பது??" மற்றொரு பயனர், “ ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் (@railminindia @ashwini.vaishnaw) சார் தயவுசெய்து இதைப் பாருங்கள், இது உயிருக்கு ஆபத்தானது!” என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
பாரதிய நியாய சன்ஹிதா, 2023, ரயில்வே சொத்து (சட்டவிரோத உடைமை) சட்டம், 1966 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000, ஆகியவற்றின் கீழ் பல மீறல்களை சுட்டிக்காட்டி, பா.ஜ.க தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லாவின் புதிதாக உருவாக்கப்பட்ட சட்ட இந்து பாதுகாப்பு குழுவின் புகாரின் பேரில் குல்சார் ஷேக் கைது செய்யப்பட்டார்.
Identify these anti nationals who create railway accidents
— Shehzad Jai Hind (Modi Ka Parivar) (@Shehzad_Ind) August 1, 2024
There have been several instances of sabotage / signals being covered with paper/ deliberate obstacles being put on tracks
Look at Gulzar Sheikh.. putting stones, cycles, obstacles on rail tracks
God knows who all… pic.twitter.com/2CMg6E0Mfc
ஷேக்கின் ஸ்டண்ட்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் அபாயம் மற்றும் ரயில் தடம் புரளும் அபாயம் ஆகியவற்றை புகார் எடுத்துரைத்தது. ஒரு எக்ஸ் பதிவில் குல்சார் ஷேக் கைது செய்யப்பட்டதை பூனாவல்லா உறுதிப்படுத்தினார்.
ஷேக்கின் யூடியூப் சேனல், “குல்சார் இந்தியன் ஹேக்கர்”, அவர் ரயில் தண்டவாளத்தில் பொருட்களை வைக்கும் பல வீடியோக்கள் உள்ளது. பொறுப்புத் துறப்புகள் இருந்தபோதிலும், உள்ளடக்கம் தொடர்ந்து ஆபத்தான நடத்தையைக் காட்டுகிறது.
இந்த சேனலில் 243 வீடியோக்கள் உள்ளன, அவற்றில் ஒன்று 99 மில்லியன் பார்வைகளை எட்டியுள்ளது. 2,35,000 க்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்கள் மற்றும் மொத்த பார்வை எண்ணிக்கை 137 மில்லியனைத் தாண்டியுள்ளது, ஷேக்கின் முந்தைய பதிவு செய்யப்பட்ட ஸ்டண்ட் அவர் ரயில் தண்டவாளத்தில் இயர்பட்களை வைத்தது ஜனவரி 2024-ல் பதிவிடப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த வீடியோக்கள், அவர் 500-கிராம் எடை மற்றும் கோடாரி போன்ற அபாயகரமான பொருட்களை தடங்களில் வைப்பதைக் காட்டுகின்றன, இது பாதுகாப்பை அவர் அப்பட்டமாக புறக்கணிப்பதைக் காட்டுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.