செங்கலால வீடு கட்டுவாங்க… ஆனா இங்க பாருங்க!

உங்கள் வீட்டினை புணரமைக்கும் போது உங்களுக்கு ஏதேனும் புதையல் கிடைத்ததா? இந்த வைரல் செய்தி பற்றி உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கமெண்ட்டில் தெரிவியுங்கள். 

By: November 27, 2020, 3:48:57 PM

Trending viral news :  அனைவருக்கும் வீடு என்பது ஒரு கனவாகவே இருக்கும். எப்படியாவது தன்னுடைய சம்பாத்தியத்தில் ஒரு நல்ல வீட்டை கட்டிவிடவே பலரும் நினைப்பார்கள். செங்கல், சிமெண்ட், என்று இந்த  காலத்திற்கு ஏற்ப வீடு கட்டினாலும் முந்தைய காலத்தில் கற்களால் கட்டப்பட்ட வீடுகள் போன்று “ஸ்ட்ராங்காக” ஏதும் இருப்பதில்லை என்று பலரும்  நினைப்பதுண்டு.

ஆனால் அமெரிக்காவில்  வாழ்ந்து வந்த தம்பதியினர் தங்களுடைய 100 வருட பழமையான வீட்டு சுவரில் கண்டறிந்ததை பாருங்கள். கள்ளச்சந்தையில் புகழ்பெற்று விளங்கிய ஒருவரின் வீட்டை 2019ம் ஆண்டில் விலைக்கு வாங்கியுள்ளனர் நிக் த்ருமொண்ட் மற்றும் பாட்ரிக் பக்கர். 1915ம் ஆண்டில் கட்டப்பட்ட அந்த பழமையான வீட்டை கொஞ்சம் புதுப்பிக்கலாம் என்று பட்டி-டிங்கரிங் பார்த்த போது சுவற்றில் இருந்து ஒரு பேக்கேஜ் கீழே விழுந்துள்ளது.

மேலும் படிக்க : இசை மருந்தாகும்… பசியில் இருக்கும் குரங்குகளுக்கு பியானோ வாசிக்கும் கலைஞர்

 

View this post on Instagram

 

A post shared by Nick Drummond (@bootleggerbungalow)

என்னவென்று பார்த்தால் 66 விஸ்கி பாட்டல்கள். தடைசெய்யப்பட்ட காலத்தில் விற்பனையில் படு ஜோராய் இருந்த 66 மதுபான பாட்டில்கள் அந்த சுவருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. கண்டுபிடிக்கப்பட்ட 66 பாட்டில்களில் 13 பாட்டிலகள் முழுவதும் மதுபானம் அப்படியே இருக்கிறது. அதில் நான்கின் நிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கிறது. சில பாட்டில்களில் விஸ்கி பாதி மட்டுமே உள்ளது. மற்ற அனைத்திலும் முழுமையாக விஸ்கி ஆவியாகிவிட்டது என்று இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் வீட்டினை புணரமைக்கும் போது உங்களுக்கு ஏதேனும் புதையல் கிடைத்ததா? இந்த வைரல் செய்தி பற்றி உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கமெண்ட்டில் தெரிவியுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Us couple finds 66 bottles of whiskey hidden in their 100 year old home

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X