ஆயுதமேந்தி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வழக்கில் 400 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 57 வயதான சிட்னி ஹோம்ஸ் அந்தக் குற்றத்தில் குற்றவாளி அல்ல என நிரூபிக்கப்பட்டு புளோரிடா நீதிபதியால் விடுவிக்கப்பட்டார்.
இப்போது 57 வயதாகும் சிட்னி ஹோம்ஸ், 34 ஆண்டு சிறை வாசத்துக்குப் பிறகு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர் தனது குடும்பத்துடன் மீண்டும் இணைந்த வீடியோ ஆன்லைனில் பார்பவர்களின் இதயங்களை உருக வைத்துள்ளது. 400 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அந்த நபர் குற்றத்தில் குற்றவாளி அல்ல என நிரூபிக்கப்பட்டு, அமெரிக்காவில் உள்ள புளோரிடா நீதிபதியால் விடுவிக்கப்பட்டார்.
1988-ல் ஆயுதமேந்தி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் சிக்கிய அவர், தவறாக அடையாளம் காணப்பட்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவருக்கு எதிராக நேரடி ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் கண்டறிந்தது என்று பிபிசி செய்தி கூறுகிறது.
இன்ஸ்டாகிராமில் பி.பி.சி பகிர்ந்துள்ள வீடியோவில், அவர் தனது தாயை இறுக்கமாக கட்டி அனைப்பதையும் தனது குடும்ப உறுப்பினர்களுடன் அன்பாக பழகுவதையும் பார்க்க முடிகிறது. அவரது தாயார் மேரி ஹோம்ஸ் கண்ணீருடன் தனது மகன் சொல்வதைக் கேட்கிறார். “நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் கடவுளுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், இதை சாத்தியமாக்கிய அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.” என்று கூறுகிறார். ஹோம்ஸ் சிறைச்சாலையை சீர்திருத்தம் செய்ய விரும்புவதாக கூறுகிறார். அவர் மேலும் கூறுகிறார், “நீங்கள் நம்பிக்கை இழக்க முடியாது. நம்பிக்கை என்பது நீங்கள் ஒருபோதும் கைவிட முடியாத ஒன்று.” என்று கூறுகிறார்.
ஏபிசி வெளியிட்டுள்ள செய்தியில், ஹோம்ஸ் ஒரு குற்றப் பழக்கம் உடைய குற்றவாளியாகத் தண்டனை பெற்றதாகக் கூறியுள்ளது. வெளிப்படையாக, அவர் இதற்கு முன்பு ஆகஸ்ட் 1984-ல் இரண்டு ஆயுதமேந்திய கொள்ளை வழக்குகளில் தண்டிக்கப்பட்டார். மேலும், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். உடனடியாக குற்றத்தை ஒப்புக்கொண்டார். 2020-ல், ஹோம்ஸ் அரசு வழக்கறிஞரின் தண்டனை மறுஆய்வுப் பிரிவை (CRU) அணுகினார். கன்வீனியன்ஸ் ஸ்டோருக்கு வெளியே இரண்டு நபர்களின் ஆயுதமேந்திய கொள்ளையில் தான் உண்மையில் நிரபராதி என்று அவர் கூறினார். இந்த வழக்கில் முழுமையான விசாரணைக்குப் பிறகு, ப்ரோவர்ட் கவுண்டி மாநில வழக்கறிஞர் ஹரோல்ட் எஃப் பிரையர், அவரது குற்றத்தைப் பற்றி நியாயமான சந்தேகங்களை எழுப்பினார் என்று ஏபிசி கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டது.
சி.பி.சி வெளியிட்ட செய்தியில், சி.ஆர்.யூ மதிப்பாய்வின் போது, ஆரம்ப விசாரணையில் ஹோம்ஸை நேரில் கண்ட சாட்சிகள் தவறாகக் கருதப்பட்டதாகவும், இந்த வழக்கில் ஹோம்ஸின் தொடர்பை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்றும் சி.பி.எஸ் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவரின் சகோதரர்களில் ஒருவரின் விசாரணையில் அவரது கார் தவறாக அடையாளம் காணப்பட்டிருக்கலாம், அவரது காருக்கும் கொள்ளையர்களின் காருக்கும் இடையிலான முக்கிய வேறுபாடுகள் கவனிக்கப்படவில்லை என்பதை நிரூபித்தது. 6 சுயேட்சை குழு உறுப்பினர்களில் 5 பேர் அவர் நிரபராதி என்றும் குற்றமற்றவர் என்றும் வாக்களித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“