‘அடுத்த போப் நான்தான்...’ போப் கெட்அப்பில் புகைப்படம் வெளியிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்’ என ஏற்கெனவே தெரிவித்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போப்பாண்டவர் போல் புகைப்படத்தை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

author-image
WebDesk
New Update
trump pope

டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை தலைப்புச் செய்திகளிலும், ஹேஷ்டேக்குகளிலும், நகைச்சுவையிலும் இடம்பிடித்தார். அமெரிக்க ஜனாதிபதி செவ்வாய்க்கிழமை, தான் அடுத்த போப்பாண்டவராக விரும்புகிறேன் என்று நகைச்சுவையாகக் கூறினார்.

அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்’ என ஏற்கெனவே தெரிவித்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தற்போது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போப்பாண்டவர் போல் புகைப்படத்தை  பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Advertisment

டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை தலைப்புச் செய்திகளிலும், ஹேஷ்டேக்குகளிலும், நகைச்சுவையிலும் இடம்பிடித்தார். அமெரிக்க ஜனாதிபதி செவ்வாய்க்கிழமை, தான் அடுத்த போப்பாண்டவராக விரும்புகிறேன் என்று நகைச்சுவையாகக் கூறினார்.

செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகையிலிருந்து தனது முதல் 100 நாள் ஆட்சியை முன்னிட்டு பேரணிக்குச் சென்றபோது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், புதிய போப்பாண்டவராக யார் வர வேண்டும் என்று தான் விரும்புவதாகக் கேட்டபோது,  “போப்பாண்டவராகவா? நான் போப்பாண்டவராக இருக்க விரும்புகிறேன், அதுதான் எனது முதல் விருப்பம்.” என்று நகைச்சுவையாகக் கூறினார்.

இதையடுத்து, பலரும் ஏஐ உதவியுடன் டொனால்ட் ட்ரம்ப் போப்பாண்டவர் உடையில் இருக்கும் புகைப்படத்தை உருவாக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டு கருத்து தெரிவித்தனர்.

Advertisment
Advertisements

pope

இதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போப்பாண்டவர் கெட்அப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நெட்டிசன்கள் பலரும் போப் கெட்அப்பில் இருக்கும் டிரம்பின் புகைப்படத்துக்கு பல்வேறு விதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

இந்த பதிவில் சில சமூக ஊடக பயனர்கள் நகைச்சுவையைக் கண்டாலும், மற்றவர்கள் இது மிகவும் உணர்ச்சியற்றது என்று விமர்சித்து, போப்பாண்டவர் பிரான்சிஸின் மரணத்தை டிரம்ப் கேலி செய்வதாக குற்றம் சாட்டினர்.

கத்தோலிக்க திருச்சபையின் போப்பாண்டவராக இருந்த போப் பிரான்சிஸ் ஏப்ரல் 21-ம் தேதி மறைந்ததைத் தொடர்ந்து, அவருக்கு அடுத்து போப்பாண்டவரைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறையைத் தொடங்க வாட்டிக்கன் தயாராகி வரும் நிலையில், டொனால்ட் டிரம்ப்பின் இந்த எதிர்பாராத கருத்து வந்துள்ளது. புதிய போப்பை தேர்ந்தெடுப்பதற்காக மே 7-ம் கார்டினல்கள் மாநாட்டைத் தொடங்க உள்ளனர். 

Viral News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: