நான் முக கவசம் அணிந்த தேச பக்தன் – டிரம்ப் : நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்?

Donald Trump with facemask : அமெரிக்காவில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வந்தநிலையில், முக கவசம் அணிய மறுத்த அதிபர் டிரம்ப், மற்றவர்களையும் அணிய வேண்டாம் என்று வலியுறுத்தியிருந்தார்

By: July 21, 2020, 4:11:40 PM

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜூலை மாத பிற்பகுதியில் பொதுவெளியில் முதல்முறையாக முக கவசம் அணிந்திருந்தார். அந்த போட்டோவை, ஜூலை 20ம் தேதி டுவிட்டரில் பதிவிட்டுள்ள டிரம்ப், முக கவசம் அணிந்த நிகழ்வை தேசபக்தியுடன் ஒப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கண்ணுக்கு தெரியாத சீன வைரஸ்க்கு எதிரான போரில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடி வருகிறோம். முக கவசம் அணியாமல் யாராலும் தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்க முடியாது என்று சிலர் கூறிவருகின்றனர். நான் உங்கள் அபிமான அதிபர். இந்த நாட்டில் என்னைவிட சிறந்த தேசபக்தர் யாரும் இல்லை என் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் டிரம்ப், கடந்த 11ம் தேதி வாஷிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு வந்தபோது முதன்முதலாக பொதுவெளியில் முக கவசம் அணிந்து வந்திருந்தார். அமெரிக்காவில் கொரோனா தொற்று பாதிப்பை குறைக்கும் வகையில் அனைவரும் முக கவசம் அணிய சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்த வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவும் பிறப்பித்தார்.

அமெரிக்காவில் கொரோனா காரணமாக லட்சக்கணக்கில் மரணங்கள் நிகழ்ந்தபோதெல்லாம் முக கவசம் அணியாமல், தற்போது அணிந்து தேசபக்தர் என்று நாடகமாடுவதா என்றும், தற்போது அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு, தேவையில்லாமல் சுயபுராணம் பாடுவதாக உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நெட்டிசன்கள் தெரிவித்துள்ள கருத்துகள் இதோ..

அமெரிக்காவில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வந்தநிலையில், முக கவசம் அணிய மறுத்த அதிபர் டிரம்ப், மற்றவர்களையும் அணிய வேண்டாம் என்று வலியுறுத்தியிருந்தார்

கொரோனா விவகாரத்தில் தான் எடுத்த முடிவை கண்டு டாக்டர்களே ஆச்சரியப்படுவதாக சமீபத்தில் டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில், நெட்டிசன்களால் பெரிதும் வறுத்து எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க – Donald Trump tweets photo wearing mask and calls himself patriotic, here’s how netizens reacted

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Us president donald trump twitter facemask donald trump with facemask trending

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X